அம்மா இந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம் ஒரு வரியில் தர இயலுமா ? நான் எத்தனையோ பக்கம் பக்கமாய் எழுதினாலும் என்னால் முழுவதும் ஒரு விவரனத்துள் அடைக்க இயலாத ஒரே விஷயம் உன் அன்புதான் அம்மா.
என் கன்னித்தமிழும் தடுமாறிய தருணங்கள் உனக்கான வரையறையை அகராதியில் தேடிய போதுதான்.ஒ அவள் "கன்னி" என்பதால்தான் உன் அருமை பெருமையை உணர்த்த இயலவில்லையோ ஓரிரு வார்த்தைகளில் !!!
பால்யத்தில் நான் எழுந்திரிக்கும் காலைப்பொழுது உனது அன்பான கொஞ்சலுடன் தான் ஆரம்பிக்கும் எப்படிப்பட்டதொரு வேலைப்பளுவிலும் எனக்கான உனது பக்கங்கள் ஒதுக்கப்பட்டே இருக்கும், அவை முழுக்க முழுக்க உன் அன்பினால் நிரம்பியே கிடக்கும்.
நான் சொல் பேச்சு கேளாமல் இருக்கும் சமயங்களில், என்னை விளையாட்டாய்
கோபப்படுத்த “ தவிட்டுக்கு வாங்கிய பிள்ளைதானே நீ” என்று சொல்லுவாய். கோபத்துடன் வீம்பாய் முறைத்து கொண்டிருக்கும் என்னை சமாதானம் செய்ய கொஞ்சுவாய் நீ . அந்த அதீத கொஞ்சலுக்காய் இன்னொரு முறை நீ அப்படி சொல்லக் காத்துக் கொண்டிருப்பேன் நான் .
பண்டிகை காலங்களில் அடுப்பும், வாணலியுமாய் இருக்கும் உன்னைக் கழுத்தில் கட்டிக்கொண்டு கொஞ்சுவேன் தள்ளிப்போ என்ற உன் எச்சரிக்கையையும் மீறி, அவ்வாறான
நாளொன்றில் பொங்கி என் மேல் தெறித்து விட்ட இரண்டொரு எண்ணெய்த்துளிகளும், நான்
செய்த ஆர்ப்பாட்டமும், மனம் கலங்கி, தவிப்பும் அழுகையுமாய் மருந்திட்டு என்னை சமாதானம்செய்த பின்னர் நான்
கவனித்தேன் அம்மா, உன்மேல் என்னை விட அதிகமாய் தெறித்திருந்த எண்ணெய்த் துளிகளை!!!
நான் எவ்வளவு சாப்பிட்டால் திருப்தி அடையும் உன் மனசு? இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று எவ்வளவு தான் சோறு போடுவாய் நீ ? உன் அன்பினால் வழக்கத்தை மீறி அதிகமாய் சாப்பிட்டு விட்டு நடக்க இயலாமல் ஊரும் போது, அருகிலுள்ள யாரிடமாவது அங்கலாய்த்து கொண்டிருப்பாய். முன்னாடி மாதிரி இவன் சாப்பிடுவதே இல்லை என்று!!!
வேலைக்கென்று வெளி உலகம் வந்த பின்னர் எனது வட்டம் பெரிதாகிப் போனது . ஆனால் உனக்கோ நானே உலகமாகிப் போனேன். நான் எப்போதாவது மனதளவில் கஷ்டப்படும் போது அது உனக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தெரியாது. உடனே உனது அழைப்பு வந்து விடும் எனது அலைபேசியில். அம்மா என்று வரும் பேரைக் கண்டவுடன் எனது மனக்கிலேசங்கள் எல்லாம் பறந்து விடும்.
நான் அம்மா என்று சொல்வதை வைத்தே என் மனநிலையை துல்லியமாக கணித்து விடுவாய் ஒரு கை தேர்ந்த மருத்துவர் போல. பிறகென்ன போதும் போதுமென்ற அளவுக்கு உன் அன்பு மழையில் நனையவிட்டு, தனி ஒருவனாய் இந்த உலகை எதிர்த்துப் போராடும் அளவுக்கு மனதைரியத்தை தந்து உன் அன்பினால் என்னை நிறையச் செய்வாய்.
உன் மடித்தலையணை தந்த நிம்மதியும், அரவணைப்பும் பாச உணர்வுகளும்
இதுவரை மட்டுமல்ல இனிமேலும் வேறெங்கிலும் கிட்டப்போவது இல்லை அம்மா.
ஒருமுறை திரு.அப்துல் கலாம் கூறினார்,
ஒரே ஒருநாள் நீ அழும்போது
உன் அம்மா புன்னகைத்தது
அது “நீ பிறந்த தினத்தன்று”.
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். உனக்கென்ன எப்பொழுதுமே முழுக்க முழுக்க அன்பினாலே என்னை நனைத்து விட்டு இயல்பாய் இருந்து விடுவாய், நானோ உன் அன்பின் முழு பரிமாணத்தையும் தாங்க இயலாமல் அடிக்கடி நெட்டுயிர்த்துப் போய்விடுகிறேன் அம்மா.சுருக்கமாகச் சொன்னால்
தெய்வங்களின் மறு உருவம் அம்மாக்கள்.
இல்லையில்லை
அம்மாக்களின் மறு உருவம்தான் தெய்வங்கள் !!!
வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!
அம்மாக்களின் மறு உருவம்தான் தெய்வங்கள் !!!
ReplyDeleteஅம்மா என்றால் அன்பு ..!
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான்... வருகைக்கு நன்றி.
Delete/ஒரே ஒருநாள் நீ அழும்போது
ReplyDeleteஉன் அம்மா புன்னகைத்தது
அது “நீ பிறந்த தினத்தன்று”
//
உண்மை ... உண்மை
சற்று கூட யோசிக்காமல் பிடித்த உண்மை...வருகைக்கு நன்றி நண்பா...
Deleteஇன்று
ReplyDelete"பாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )":
கல்லூரி செல்லும் மகன் எனக்கு இன்னம் என் அம்மா என் குரலறிகிறாள். தொலைபேசி அழைப்பிலேயே என்ன பிரச்சனை அங்கே எனும் மந்திரம் அறிந்த அம்மா.
ReplyDeleteஅந்த பிரச்சினையை இலகுவாக்கும் மந்திரம் தெரிந்த அம்மா..வருகைக்கு நன்றி..
Deleteஅண்ணே வணக்கம்ணே :-) :-)
ReplyDeleteஇது கட்டுறை அல்ல....விமரிசனத்துக்கு உட்பட்டதும் அல்ல...உண்மையின் உறைவிடம்...உலகில் நாம் பார்க்கும் அனுபவிக்கும் எதையும் வார்த்தைகளால் அளவிடமுடியும்...நிறை குறைகளை சொல்லிவிடமுடியும்...அம்மா ஒன்ற சொல் ஒன்றே நிறைதான்...எல்லாவற்றிக்கும், ஏன் இறைவனுக்கும் மேல் என்பேன்..ஏன் என்றால் அம்மாதான் அந்த தெய்வம்...அளவிடமுடியாத, அடியும் முடியும் தெரியாத ஒரு அண்டம்...ஆம் சரியாக சொன்னீர்கள்...
ReplyDeleteஅம்மாக்களின் மறு உருவம்தான் தெய்வங்கள் !!!
உங்கள் தாய் உங்களை நல்ல வளர்திருக்கிறார்கள்...நீங்களும் நல்ல மகனாக..
நண்பா உண்மையை உறைப்பின் அழுகைத்தான வருகிறது....
நீங்கள் இந்த உலகத்தில் சார்ந்த இன்னும் எவ்வளவோ அறிவுப்பூர்வமாகவோ,டெக்னாலஜி பூர்வமாகவோ எத்தனையோ புதுமையான ஒன்றை எழுதலாம்...ஆனால் அதெல்லாம் இந்த ஒரு கட்டுறைக்கு ஈடு ஆகாது...தாயன்பை எதனாலையும் ஈடுகட்ட இயலாது.
ஆம் பெற்றதாய்க்கு உள் உணர்வு உணர்த்தும், தன் பிள்ளைக்கு எதோ ஒரு தொல்லை என்று...அவளின் இரத்தமும் தசையுமான நம்மை அவள் அறியாமல் யார் அறிவார்...இக்கட்டுறை அத்தனை தாய்மார்களுக்குமே சமர்ப்பணமாக தெரிகிறது...
அந்த கைக்குழந்தையின் தூக்கம் கெடாதிருக்க, தாயின் அன்பான கண்டிப்பை பாருங்களேன்.
நன்றி நண்பா.....உங்களின் இந்த கட்டுறைக்கு....ஒட்டுமொத்த உணர்வின் வெளிப்பாடாக....PON
நன்றி நண்பா..
Deleteநன்றி.. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ReplyDelete