செத்துப் போ விவசாயியே - 1
தண்ணீர் இல்லை நிலத்தடி நீர் எத்தனையோ அடிக்கு மேலே போய்விட்டது என்று சொல்லும் நாம்தான், நிலத்தடி நீரைச் சேமிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் செய்யமாட்டோம். மழை இல்லை என்று புலம்பும் நாம்தான் இரண்டு நாட்கள் தொடர்ந்தாற் போல மழை பெய்தால் ஊரே வெள்ளக்காடாகி விட்டது, ரோடெல்லாம் ஒரே தண்ணீர் என்று புலம்புகிறோம்.
அதற்கும் முழு காரணமும் நாமாகத்தான் இருப்போம். இருக்கும் குளங்களையும், வாரிகளையும் தூர்த்து, சிறுகச் சிறுக சேர்த்து பிளாட் போட்டு விற்றிருப்போம்.அடுத்த ஒரு வாரம் கழித்து தண்ணீர் இல்லை ,மழை இல்லை என்று அதே பஞ்சப் பாட்டை திரும்ப பாடுவோம்.
தண்ணீர் இல்லை நிலத்தடி நீர் எத்தனையோ அடிக்கு மேலே போய்விட்டது என்று சொல்லும் நாம்தான், நிலத்தடி நீரைச் சேமிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் செய்யமாட்டோம். மழை இல்லை என்று புலம்பும் நாம்தான் இரண்டு நாட்கள் தொடர்ந்தாற் போல மழை பெய்தால் ஊரே வெள்ளக்காடாகி விட்டது, ரோடெல்லாம் ஒரே தண்ணீர் என்று புலம்புகிறோம்.
அதற்கும் முழு காரணமும் நாமாகத்தான் இருப்போம். இருக்கும் குளங்களையும், வாரிகளையும் தூர்த்து, சிறுகச் சிறுக சேர்த்து பிளாட் போட்டு விற்றிருப்போம்.அடுத்த ஒரு வாரம் கழித்து தண்ணீர் இல்லை ,மழை இல்லை என்று அதே பஞ்சப் பாட்டை திரும்ப பாடுவோம்.
- படிக்காத ஒன்றும் அறியாதவர்கள் என்று நாம் நினைக்கும் நமது பாட்டனும் முப்பாட்டனும், முன்னோர்களும் அமைத்து வைத்திருந்த விவசாய முறை நாம் அறிவோமா ?
- பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்து தஞ்சை டெல்டா முதல் தலைக்காவிரி வரை கோலோச்சிய தமிழனின் யுக்திகளை நாம் தொடர்கிறோமா ??
- அவர்கள் செய்த நீர்ப்பங்கீடு முறை நமக்கு நினைவில் உள்ளதா? மழைக்காலத்தில் நமது கிராமங்களில் உள்ள குளங்கள் வரிசைக்கிரமமாக நிரம்புவதை இப்போது பார்க்க முடியுமா?
- பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வீட்டிற்கு ஒருவர் என முறை வைத்து வாய்க்கால்களையும், வாரிகளையும் வெட்டி சீரமைப்பார்களே அந்த முறை இப்போது உள்ளதா ?
- உபரி நீரை வெளியேற்றுவதற்காக காட்டாற்றுடன் இணைக்கப்பட்டுள்ள வாய்க்கால் இருக்கிறதா இப்போது ?
- சிறுவயதில் நமக்கு தெரிந்து பயிர் செய்த, குருதாளி, பனிப்பயறு,கேப்பை என எத்தனை தானியங்கள் காலப்போக்கில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. அவற்றை முக்கியப் பயிர்களின் அறுவடைக்கு பின் இடையிடையே பயிர் செய்வதன் மூலம் நுண்ணுயிர் சத்துக்கள் சம நிலைப்படுத்தப்பட்டு இருந்ததை நாம் செய்கிறோமா இப்போது?
அவர்களின் தாரக மந்திரம் இதுவாகக் கூட இருக்கலாம் விவசாய நிலங்களை கான்க்ரீட் காடுகளாக்கி, நிலத்தடி நீரை தொலை தூரத்திற்கு அனுப்பி, மிச்சமிருக்கும் உவடு தட்டி போன நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு விவசாயிகளை பார்த்து "செத்து போ விவசாயியே " என்று சொல்வதாக கூட இருக்கலாம்...
விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு,தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் ...
வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!
உலகத்தை அழிக்க இப்படியெல்லாம் முயன்றால்தானே உண்டு....
ReplyDeleteபடிக்கவே வருத்தமாக இருக்கிறது. விவசாயக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டதால் அவர்களின் வேதனை நன்றாகப் புரிகிறது. மேலே இருந்து பார்ப்பவர்க்கு கீழே இருப்பவரின் வலியும் வேதனையும் எப்படிப் புரியும்?
பணத்தை சாப்பிட்டு பசியாற முடியாது என்ற நிலை வரும் போதுதான் இவர்களுக்கு விவசாயியின் அருமை தெரியும். ஆனால் அப்போது அந்த இனமே அழிந்து போயிருக்கும். என்ன செய்வது??. வருகைக்கும் புரிதலான கருத்துரைக்கும் நன்றி சகோ.
Deleteநம்பூட்டு தோய்க்கற தண்ணி, பாத்திரம் தேய்க்கும் தண்ணி என்று எல்லாவற்றையும் நம் வீட்டு புழக்கடையில் வாழைக்குப் போவது போல் செய்திருப்போம். இன்று சொட்டு நீர் கூட பூமா தேவியின் நெஞ்சை நனைக்க விடுவதில்லையே நாம்.
ReplyDeleteநேற்று கூட லேசான மேக மூட்டத்துக்கே குடை கொண்டுவந்த தோழியுடன் சண்டையே போட்டேன்.
நல்ல கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்
வீட்டைச் சுற்றிலும் சிமென்ட் தரையிட்டு மழை நீரைக்கூட தரைக்குள் அனுமதிப்பதில்லை. மனதைப் போலவே சுற்றுப்புறத்தையும் இறுக்கமாக்கிவிட்டோம் நாம்... வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும் நன்றி...
Deleteவாழ்த்துக்கு நன்றி நண்பா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteநாமெல்லாம் நுனி கிளையில் அமர்ந்து கொண்டு
ReplyDeleteஅடி மரத்தை வெட்டுகிறோம்.
யாருக்கு நஷ்டம் என்பது
விழும்போது தான் தெரியும்.
உங்களுக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு
மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
நன்றி சகோ. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
Delete