அகமும் புறமும்
இதமாய் நனைத்து
குழந்தையாய்
உள்ளம் குதூகலிக்க
வைத்து
மறந்திருந்த பால்யம்
உசுப்பி
தற்கால கவலை
மரணித்து
இயல்பாய் உயிரினில்
ஒரு சிலிர்ப்பை
தந்தது அந்த
மாலை நேரத்து
மழை .
அந்த அற்புத
கணங்கள்
மண் நனைத்து
வாசனை கிளப்பி
என்னை ஏகாந்தத்தில்
திளைக்க விடலாம்.
இல்லை
நெஞ்சில் சூல் கொண்டு
கவிதையாய் பிரசவிக்கலாம்.
எப்போது வேண்டுமானாலும் !!!
வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!
கவிதையும் புகைப்படமும் அழகு
ReplyDeleteவருகைக்கும் மறுமொழிட்டமைக்கும் நன்றி சகோ..
Deleteமாலை நேர மழை... மண் கமழும் உள்ளம் மகிழும் உங்கள் கவிதை போல... நன்று
ReplyDeleteவருகைக்கும் மறுமொழிட்டமைக்கும் நன்றி சகோ..
Deleteவறுத்த கடலையும்,
ReplyDeleteகொஞ்சூண்டு ராகிவடையும்,
ஒரு லிட்டர் காபியும்,
கூடவே என் காதலியும்....
(இதுக்கு மேல நீனே பில்அப் பண்ணிக்கவும்)
#கவுஜ எனக் கொள்க
ஆகா.. ஒகோ... அருமை அற்புதம்...என்னே உங்களின் கற்பனை வளம்.. கலக்கீட்டிங்க காப்பி... இவ்வளவு அருமையா இருந்தா அது கவிதையா தானே இருக்கும். இதை தனியா நீங்க எழுதி வேற காட்டனுமா என்ன????? நன்னி :-)
Deleteஎது எப்படியோ, அந்த உணர்வுகள் தரும் சுகங்கள், நிகழ்கால இருக்கத்திலிருந்து நம்மை விடுவிக்கும் திறன்கொண்ட ஒரு தற்க்காலிக சொர்க்கம்தான். pon
ReplyDeleteஆம் அது ஒரு தற்காலிக சொர்க்கம் தான்.. வருகைக்கும் மறுமொழிட்டமைக்கும் நண்பா.....
Delete