Thursday, January 31, 2013

"விஸ்வரூப” அம்மா





பெண்களின் தைரியத்தை பற்றி  பேச நினைக்கையில் முதலில் நினைவுக்கு வருவது நீங்கள்தான். உங்களது தீர்க்கமான முடிவெடுக்கும் திறனும் தைரியமும் அசாத்தியமானதுதான். ஆனால் அது சில நேரங்களில் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்” என்று பிடிவாதம் பிடிக்கையில் அந்த நம்பிக்கை நீர்த்துப் போகிறது. 

என்ன செய்தான் அந்த “விஸ்வரூபக் கலைஞன்” உங்களை? ஏன் இத்தனை சித்திரவதை அவனுக்கு? வாழ்ந்து வளர்ந்த இடத்தை விட்டு நான் வெளிப்போகிறேன் என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது உங்களது ஆட்சி பரிபாலனம். திறமையும் கலையும் ஒருங்கே அமையப் பெற்றவன் சற்றுக் கர்வத்துடன் இருப்பது பொது விதிதானே!! இது கலைத்துறையில் இருந்த உங்களுக்கு தெரியாதா?

எது உங்களின் காழ்ப்புணர்ச்சியை தூண்டி விட்டது?
வியாபார ரீதியாக உங்கள் சேனலுக்கு பிடி குடுக்காததா? அல்லது தந்த சேட்டிலைட் உரிமையை திரும்ப வாங்கியதா?
இல்லை அதை உங்களுக்கு எதிரான சேனலுக்கு விற்றதா?
இல்லை ஒரு வேட்டி  தமிழன் பிரதமராக வேண்டும் என்று சொன்னதை மஞ்சள் துண்டார் திரித்து உங்களை தொடர்பு படுத்தி  சொன்னதால் ஏற்பட்ட கடுப்பா?

சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்த பின்னரும், நீதிமன்றம் தடையை நீக்கிய பின்னர் தடைக்கு தடை வாங்கி உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொண்டீர்களே, இதை என்னவென்று சொல்வது?

கீழே விழுந்தாலும் மூஞ்சில் மண் ஒட்டாத கதையாக கலவரம் வெடிக்குமென்று உளவுத்துறை சொன்னது, மொசாட் சொன்னதுன்னு சின்னப் புள்ள மாதிரி சொல்றீங்க, கூடவே மொத்த காவலர்கள், திரையிடப்படும் திரையரங்குகள், பாதுகாப்புக்கு தேவைப்படும் காவலர் என்று புள்ளிவிபரம் சொல்லி ஒரு எமெர்ஜென்சி ரேஞ்சுக்கு எங்களை கலவரப்படுத்துறீங்களே, இதை என்னவென்று சொல்வது?   
அப்புறமா சம்மந்தப்பட்டவர்கள் கூடிப் பேசி சுமூக முடிவு ஏற்பட்டால் அரசுக்கு அதற்கு ஒத்துழைக்கும் என்கிறீர்கள்!! இது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போலல்லவா இருக்கிறது!!
ஒரு ப்ரச்சனையை (நாமே கிளப்பியது தானே)  தெளிவாக தீர்க்க இயலாமல் அதை அன்னியப்படுத்தி வைத்திருக்கும் நமக்கு பிரதமர் பதவி கிடைக்குமா? அல்லது கிடைத்தால் நிலைக்குமா??

குடும்ப அரசியல் அராஜகம் தாங்காமல் இம்முறை உங்களுக்கு மகுடம் சூட்டியதற்கு 16 மணி நேர பவர் கட், பஸ் கட்டண அதிரடி உயர்வு, விவசாயிகளின் தொடர் தற்கொலை அப்படின்னு எங்களுக்கு ரொம்ப செஞ்சிட்டீங்க. போதாக்குறைக்கு இப்போ  இந்த மலிவான அரசியல்??

நான்கைந்து குடும்பமாய் சேர்ந்து போன ஆட்சிக்கு அவர்களே குழி பறித்ததை போல நீங்கள் ஒருவரே உங்கள் ஏதேச்சதிகார  குணத்தால் உங்கள் ஆட்சிக்கு நீங்களே உலை வைத்து விடாதீர்கள்..

கடைசியாய் கர்வக் கலைஞன் சொன்னதுதான்

“விழுந்தால் விதையாய் விழுவேன்

எழுந்தால் விருட்சமாய் எழுவேன்”

“விஸ்வரூபக் கலைஞன்” மகா விருட்சமாய் உருமாறும் நாளை நோக்கி, நம்பிக்கையோடும் நாங்களும்….

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன்!!

7 comments:

  1. படத்தின் தடை நீங்குவது இஸ்லாமிய கூட்டமைப்பின் முடிவில் தான். -‍ ஜெ.

    இஸ்லாமிய கூட்டமைப்புகள் எப்படி சிறிய குழுவாக இருக்க முடியும்? அவர்கள் சிறிய குழுவா?

    கமல்ஹாசனும் இறங்கி வருவதாகத் தெரியவில்லை. படத்தில் சர்ச்சைக் காட்சிகளை நீக்க அவர் முன்வரவும் இல்லை

    இஸ்லாமிய அமைப்பினருடன் கமல் சமரசமாகப் போய்விட்டால், படத்தை வெளியிடுவதில் எந்தத் தடையும் இல்லை

    விஸ்வரூபம் படத்தை முஸ்லீம் தலைவர்களிடம், பிரதிநிதிகளிடம் முன்பே கமல்ஹாசன் காட்டியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வளர்ந்திருக்காது.

    ஆனால் அவர் உண்மையான அக்கறையுடன் அவர் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.


    CLICK >>>>>>> அனைத்து பிரச்சினைகளுக்கும் கமல் தான் காரணம் - முதல்வர் ஜெயலலிதா புகார். .

    .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும் நன்றி...

      Delete
  2. //பெண்களின் தைரியத்தை பற்றி பேச நினைக்கையில் முதலில் நினைவுக்கு வருவது நீங்கள்தான். உங்களது தீர்க்கமான முடிவெடுக்கும் திறனும் தைரியமும் அசாத்தியமானதுதான். ஆனால் அது சில நேரங்களில் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்” என்று பிடிவாதம் பிடிக்கையில் அந்த நம்பிக்கை நீர்த்துப் போகிறது.// well done.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும் நன்றி...

      Delete
  3. Replies
    1. வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும் நன்றி...

      Delete
  4. தகவலுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete