Saturday, January 19, 2013

சமர் – பார்த்தீங்கன்னா உங்களுக்கு திமிர்.

“மனித வேட்டை”ன்னு ஒரு சுபா எழுதின ஒரு கதையில 4 பணக்காரங்க பொழுது போகாம காட்டு மிருகங்களை அவங்களோட தீவுல வேட்டையாடி போரடிச்சு, மனிதனை கொண்டு வந்து அந்த தீவுல விட்டு வேட்டையாடுவாங்க அதேமாதிரியான கதைதான் இதுவும்.

ரெண்டு பணக்காரத் திமிர் பிடிச்ச  _ _ _  _ _ _ _ கேப்புல எதாவது கெட்ட வார்த்தை போட்டுக்கங்க. ஹீரோவை டார்ச்சர் பண்ணுறதா நெனைச்சு படம் பார்க்க போன நம்மள மாதிரியான அப்பாவிகளை டார்ச்சர் பண்ணுறதுதான் கதை. படத்தோட ஆரம்பத்துலேயே “எலெக்ட்ரிக் சா” கொண்டு வருவாங்க நான் கூட மரம் அறுக்கத்தான் கொண்டு வராங்கன்னு நெனைச்சா அப்புறம் தான் தெரிஞ்சது அது படம் பார்க்க போன நம்ம கழுத்த அறுக்கத்தான்னு.. என்னத்தை செய்ய?? விதி வலியது!!!

பாங்காங்க்கு ஒசி டிக்கெட்டுல போன நம்ம விசாலு ரொம்ப திறமையா நவரசத்தையும் மூஞ்சில காட்டி நடிச்சுருக்காப்ல. ஆனா நம்மளுக்குத்தான் கடுப்பைத் தவிர வேற எந்த உணர்ச்சியும் வரமாட்டேங்குது.

இந்த ஊரில பெரிய டான் அப்படின்னு சொல்லிட்டு நம்ம ஸ்ரீமனைக் காட்டுறாங்க அப்போ அவரும் கைல டாட்டூ குத்திக்கிட்டு ரொம்ப டெரரா இருக்காரு.. படம் பார்க்குற எல்லாரும் பயத்துல கண்ணை மூடிக்கிட்டாங்க…. (வடிவேலுவுக்கு ரீப்ளேஸ்மென்ட் போல பார்த்த ஒடனே சிரிப்பு வருது….)

பயங்கரமான திருப்பங்கள் படம்  நெடுகவளைஞ்சு வளைஞ்சு ஒட
நம்மளுக்குத்தான் ரொம்ப குஷ்டமா இருக்கு.. ஆனா நம்ம விசாலு   பஸ்,காரை எல்லாம் அப்படியே அலேக்கா தாண்டி, தாண்டி வில்லனை தொரத்திகிட்டு ஒடுறார். அப்படி ஒடி கடைசியா ஒரு ட்ரைனேஜ் மேன்ஹோல் பக்கத்துல ஒக்கார்ந்து உத்து உத்து பார்ப்பார். ஏன்னா மந்திரவாதி படத்துல வர்ற மாதிரி, ட்ரைனேஜ் மேன்ஹோல் அந்த வில்லனை விழுங்கிடும். அப்பாடா இடைவேளை…

ஆனா அந்த சனியன் பிடிச்சவன் சாகுறதுக்கு முன்னாடி வில்லனை பத்தி குடுக்குற பில்டப்பும், ரெண்டு சைக்கோ வில்லனும் கை தட்டி சிரிக்கிறதையும் பர்த்துட்டு சரி இனிமேதான் படமே அப்படின்னு தப்பா கணிச்சுட்டு உள்ளே போனா, ரெண்டு சைக்கோ வில்லனும் சிரிச்சு சிரிச்சே நம்மள சாகடிக்குறானுங்க…

அது எப்படி இருக்கும்ன்னா ஏண்டா எவ்வளவு தெகிரியம் இருந்தா இடைவேளைக்கு அப்புறமாவும் நீங்க படம் பார்க்க வந்திருப்பீங்கன்னு நம்மள பார்த்து கேக்கிற மாதிரி இருக்கும்.

ஒரு ஸீன்ல நம்ம விசால் கேப்பார் ஏண்டா என்னைய சாகடிக்குறீங்கன்னு அதுக்கு உன்னைய மட்டுமா படம் பார்க்க வந்த எல்லாரையும் தானேன்னு மைண்ட் வாய்ஸ் கேக்குறத மறைக்க முடியல..

காஸ்ட்யூம் டிசைனருக்கு பாதி சம்பளம்தான் போல, த்ரிஷாவை ரொம்ப நேரமா ஒரே ட்ரெஸ்ஸோட சுத்த விட்டுட்டாங்க கடைசில. அந்த ட்ரெஸ் எப்படி இருக்கும்னா ரிங் மாஸ்டருக்கு தெரியாம பாதியில கூட்டி வந்த சர்க்கஸ்காரி போட்டிருக்கிற ட்ரெஸ்ஸேதான் அது.

கடைசியா படம் முடிஞ்சதுக்கு அப்புறமும் நம்மளை கடுப்பேத்திட்டாங்க எப்படின்னா “WRITTEN& DIRECTED BY THIRU” ன்னு போட்டு அவரை மறக்க முடியாதபடி செஞ்சிட்டாங்க. (நம்மள கொலைகாரனா ஆக்காம விடமாட்டாங்க போல!!)

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!

2 comments:

  1. அட என்னங்க நீங்க ட்ரிம் குயின் த்ரிஷாவை பத்தி ஒரு வார்த்தை சொல்லவே இல்லை? கொஞ்சம் ஓவராத்தான் வெறுப்பேத்திட்டேனோ? இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    ReplyDelete
    Replies
    1. ட்ரிம் குயினா இல்ல ட்ரங்கன் குயினா நண்பா??? நீங்க வேற விசாலோட பெர்ஃபாமன்ஸ்ல மெய்மறந்து யாரையும் பார்க்கவே தோணல போங்க... வருகைக்கு நன்றி நண்பா...

      Delete