சின்னப்பையனா இருக்கும் போது நம்மள தியேட்டருக்கு அதிகமா கூட்டிட்டு போகமாட்டாங்க. ஏன்னா போன கொஞ்ச நேரத்துல படத்துல சண்டை எப்போவரும், எப்போவரும்னு கேட்டு நச்சரிக்கிறது. இல்லைன்னா கும்பகர்ணனை குசலம் விசாரிக்க போயிடுறது. டிக்கெட் எடுத்து தூங்கினது கூட அவங்களுக்கு கடுப்பாகாது, படம் முடிஞ்சதுக்கப்பறம் தூக்க கலக்கத்துல என்னைய தூக்கிட்டு போக சொல்லி சண்டை போடுறதுல ரொம்ப கடுப்பாகிடுவாங்க (நம்மதான் மாடு மாதிரி இருப்போமே!!!! ). இதுனாலேயே என்னைய அடிக்கடி கழட்டி விட்டுட்டு படத்துக்கு போயிருவாங்க.
ஒருநாள் சாயந்திரம் நான் கராத்தே கிளாசுக்கு வந்துட்டேன். மாஸ்டர் வர லேட்டானதால கிரௌண்டுக்கும் ரோட்டுக்குமா கராத்தே ட்ரெஸ்ஸோட ஓடி ஓடி அவர் வர்ராறா இல்லையானு பார்த்து விளையாண்டுட்டு இருந்தோம். அப்ப என்னோட பிரெண்ட் ஒருத்தன் வந்து உன்னோட அம்மா வர்றாங்கடான்னு சொல்ல, ஓடிவந்து பார்த்தா என்னோட அம்மாவும், புதுசா டீச்சர் வேலையில சேர்ந்திருந்த என்னோட அத்தாச்சியும் வந்துகிட்டு இருந்தாங்க, நான் ஓடிப்போய் அவங்க முன்னாடி நின்னவுடனே அவங்க ஷாக்காகி,
ஒண்ணுமில்லப்பா, அத்தாச்சிக்கு நோட்ஸ் ஆப் லெசன் பார்மேட் வாங்கணும் அதான் இந்த டீச்சர் வீட்டுக்கு போறோம்னு எனக்கு தெரிஞ்ச ஒரு டீச்சர் பேரையும் சொல்லிட்டு போனாங்க. கரெக்ட்டா 6.30 மணிக்கு அவசர அவசரமா நோட்ஸ் ஆப் லெசனான்னு?? நம்ம மனசுக்குள்ள ஒரு அலாரம் அடிச்சுக்கிட்டே இருந்ததால கேட் ஓரமா நின்னு பார்த்துகிட்டே இருந்தேன் .
ஒண்ணுமில்லப்பா, அத்தாச்சிக்கு நோட்ஸ் ஆப் லெசன் பார்மேட் வாங்கணும் அதான் இந்த டீச்சர் வீட்டுக்கு போறோம்னு எனக்கு தெரிஞ்ச ஒரு டீச்சர் பேரையும் சொல்லிட்டு போனாங்க. கரெக்ட்டா 6.30 மணிக்கு அவசர அவசரமா நோட்ஸ் ஆப் லெசனான்னு?? நம்ம மனசுக்குள்ள ஒரு அலாரம் அடிச்சுக்கிட்டே இருந்ததால கேட் ஓரமா நின்னு பார்த்துகிட்டே இருந்தேன் .
லெப்ட்ல போனா டீச்சர் வீடு, ரைட்ல போனா தியேட்டர்ன்னு பார்த்துகிட்டே இருக்க , நம்ம வில்லத்தனம் தெரியாத நம்மாளுங்க திரும்பி கூட பார்க்காம ரைட்ல திரும்ப, நண்பனொருவனை என்னோட டிரெஸ்ஸ வீட்டுக்கு எடுத்துட்டு போகச் சொல்லிட்டு, கராத்தே ட்ரெஸ்ஸோட வடிவேலு சொல்ற மாதிரி "எடுத்தேன் பாருங்க ஓட்டம்" ரோடு, மார்கெட்டுன்னு ஒன்னும் பார்க்கலையே. எங்கம்மா டிக்கெட் எடுக்க போற நேரத்துல உள்ள போய் சேர்ந்துட்டேன். மாஸ்டர் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்னு பிட்டை வேற போட்டுட்டு, படத்தையும் தூங்காம பார்த்துட்டேன் .
ஆனா நம்ம நேரந்தான் நாம பஸ்ல போன அது பிளைட்டுல நம்மளுக்கு முன்னாடி வந்து நிக்குமே !!!.
நான் இப்படி பாக்யராஜ் மாதிரி ஸ்லோமோஷன்ல கராத்தே ட்ரெஸ்ஸோட ஓடி வந்ததை லேட்டா வந்துகிட்டு இருந்த கராத்தே மாஸ்டர் பார்த்துட்டார். அப்பறம் என்ன? அடுத்த கிளாசுல நாந்தான் அவருக்கு "பஞ்சிங் பேக் " . குத்துங்க மாஸ்டர் குத்துங்கன்னு நான் நிக்க, பைனல் டச்சா கைல மடக்கி வைச்சிருந்த பெல்ட்டால என்னை அடிக்க ஓங்க , எசகு பிசகா திரும்புன நான் இன்னொருத்தர் மேல நல்லா மோத என்னோட சில்லு மூக்கு ஒடைஞ்சு மூக்குலேருந்து ரத்தம் கொட்டோ கொட்டென கொட்டிடுச்சு. சரி சரி தக்காளி சட்னிதானே விடுன்னு தொடச்சிக்கிட்டு வீடு போய் சேர்ந்தேன். (பின்னே இதையெல்லாம் சொல்லி அங்க வேற அடி வாங்கனுமா என்ன???)
"ரத்த தானம் ".
வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!