திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் வேடிக்கை தான் பார்க்குது. இதை நிரூபிப்பது போல ரெண்டு சம்பவம் நடந்தது,
சம்பவம் #1
போன வாரத்துல என்னோட நண்பனிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதாவது அவர் லண்டனுக்கு ஒரு வேலை விஷயமா போனப்ப அங்க எதோ ஒரு பிரச்சினையில மாட்டிகிட்டதாகவும், அதை தீர்க்க ஒரு ரெண்டு லட்சம் அனுப்ப சொல்லி இருந்தான் . உன்கிட்ட அவ்வளவு பணம் இல்லாட்டி பரவாயில்ல உன்கிட்ட எவ்வளோ இருக்கோ அதை அனுப்பு. மீதிய நான் மத்த நண்பர்களிடம் இருந்து வாங்கிக்கிறேன். உன் பணத்த ஊருக்கு வந்த உடனே எப்படியாவது திருப்பி தந்துடுறேன்னு உறுதிமொழி வேற.லண்டன்ல ஒரு தெளிவான முகவரி மட்டும் இருந்தது ஆனால் அலைபேசி எண் எதுவும்
இல்லை. எனக்கு கொஞ்சம் சந்தேகம் வர அவனோட துபாய் அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்ட போது சாட்சாத் அவனே எடுத்து
பேசினான். அவனோட மின்னஞ்சலை யாரோ ஹாக் செய்து விட்டதாகவும், இதே போன்ற பல மின்னஞ்சல்களை
பலருக்கும் அனுப்பி விட்டதாகவும்
கூறினான். அப்போது அவன் கேட்டான் மச்சான் உனக்கு சந்தேகம் எப்படி
வந்ததுன்னு? கடுப்பில் இருந்த நான் கூறினேன் “தக்காளி இந்த மூஞ்சி எல்லாம் போற
அளவுக்கு லண்டன் ஒன்னும் அவ்வளவு மோசமாகலைன்னு”
சம்பவம் #2
நண்பன் ஒருவனை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். ரொம்ப
மும்முரமாக வேலை தேடிக்கொண்டிருந்தான். பாரபட்சமில்லாமல் கிடைக்கும் எல்லா நாடுகளுக்கும், எல்லாவிதமான வேலைக்கும் விண்ணப்பித்துக்
கொண்டிருந்தான். ஒரு நாள் மிகவும் சந்தோஷமாக பேசினான். மச்சான் லண்டன்ல ஒரு வேலை
கிடைச்சிருக்கு, நியமனக் கடிதம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைப்பதாகவும் கூறினான். மாத
சம்பளம் 8000 பவுண்டு கிடைக்கும் என்றும் கூறினான். ரெண்டு நாள் கழித்து ஒரு நியமனக்
கடிதத்தை எனக்கு அனுப்பி இருந்தான். அதில் கூறப்படாத சலுகைகளே இல்லை எனலாம்.
நின்னா பவுண்டு, நடந்தா பவுண்டுதான். அப்புறமா உங்களோட சான்றிதழ், கடவுச்சீட்டு
நகல் எல்லாம் அனுப்ப சொல்லி இருந்தாங்க. எங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும்
எல்லாமே நகல்தானே கேட்கிறான்னு அதையும் அனுப்பினான்.
அப்புறம் கேட்டான் பாருங்க உங்களுக்கு விசா எடுக்கனும். தங்குமிடம் ஏற்பாடு செய்யனும், டவுசர
கழட்டனும் அப்படி இப்படின்னு சொல்லி கொஞ்சமே கொஞ்சமா ஒரு 1000 பவுண்டு கேட்டுட்டு,
அடைப்பு குறிக்குள்ள இதையும் நீங்க இங்க வந்த உடனே திரும்ப வாங்கிக்கலாம்ன்னு சொல்லி, ஒரு வங்கி
கணக்கு எண் அனுப்பி அவனொரு திருட்டுபயல் என்பதை உறுதி செய்து இருந்தான். கடுப்பான நண்பன் அவனை திட்டி எவ்வளவு கெட்ட வார்த்தை கொண்டு எழுத முடியுமோ
அவ்வளவையும் எழுதி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான்.
அந்த திட்டுதலின் ஆரம்பம் மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த
அவனுடைய கொள்ளு பாட்டியில் நடத்தையில் சந்தேகப்படுவதில் இருந்து ஆரம்பித்து
இருந்தது!!!
வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரையிலும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.
ReplyDeleteஉண்மைதான் ஐயா.. தங்களின் வருகைக்கு நன்றி, தொடரட்டும்...
Deleteமெய்ல் ஹாக்கிங் சமீபத்தில் எனக்கும் அனுபவம் இருக்கு
ReplyDeleteநான் ஸ்பெயின்ல இப்பாடி என் பாஸ்போர்ட் எல்லாம் மிஸ்ஸாகி நிற்பதா ஒரு மெய்ல் அனைவருக்கும் போனது ..
நம்ம சென்னைல ஐஸ் எக்சிபிசன் நடத்தறாங்களே அதில் என்ட்ரன்ஸ் லேயே நிறைய பணியாளர்கள் நம்ம போன் மற்றும் அட்ரஸ் டிடீல்ஸ் எடுக்காங்க ,,சில நாள்,களைத்து ஒரு அழைப்பு வருது உங்க பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கு ஐம்பதாயிரம் வேல்யூ பொருட்கள் கோவா ட்ரிப் எம்ன்றேல்லாம் சொல்றாங்க கடைசில எல்லாம் பிராடுத்தனம்
ஸ்பென்சர் ப்லாசால லீக்ஸ்----- என்றொரு நிறுவனம் big பசார் பேரை சொல்லி இப்படி ஏமாற்று வேலை செய்யுது ..நீங்க சொல்றத்கு சரி
எமாருவோரிருக்கும்வரை இப்படிதான் நடக்கும்
ஆமாம். சிலவற்றை சென்னையிலிருக்கும் எனது நண்பர்களும் கூறினார்கள்.
Deleteதெளிவூட்டிப்போகும் பயனுள்ள பதிவு
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
நன்றி.. தங்களின் வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும்.
ReplyDeleteஇப்படி ஏமாற்றுவது அடிக்கடி நடக்குதுங்க.
ReplyDeleteமேலும் மென் பொருள் வல்லுநர்களை குறிவைத்து சென்னையில் ஒரு தில்லாலங்கடி நடக்குது.
5 நட்சத்திர ஹோட்டலில் நேர்முகத்தேர்வு எல்லாம் நடத்திவிட்டு, மருத்துவ சோதனை,விசா ,இமிக்கிரேஷனுக்கு பணம் வேண்டும்னு ஒரு அமவுண்ட் வாங்கிட்டு அனுப்பிடுறாங்க,யாருக்கும் வேலைக்கிடைச்சாப்போல இல்லை.
5 நட்சத்திர ஹோட்டலில் இன்டர்வியு என்பதால் பெரிய இடம்னு நம்பி போறாங்க மக்கள்.
ரெசூம் எப்படி கிடைக்குதுன்னு தெரியலை,அநேகமா ஆன் லைன்ல எல்லா தளத்திலும் பதிவு செய்வதை எடுத்துப்பிடிக்கிறாங்க என நினைக்கிறேன்.
சிலர் நிஜமாகவே வேலைக்கொடுக்க இன்டர்வியு நடத்தவும் செய்யலாம், எனவே நல்லா யோசித்து செய்வது நல்லது.
உண்மைதான் நண்பரே ஏமாறுவதும், ஏமாறாமல் இருப்பதும் நமது கைகளில் தான் உள்ளது. தங்களின் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி..
Deleteஇந்த "ஏமாற்றலாம்" என்பதை நமக்கு இளமையில் இருந்து போதிக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்களோ? தெரியாது ஆனால் நான் அடித்துச் சொல்லுவேன்.
ReplyDeleteகாகம், வடை, நரி....கதை இளமையில் படித்தோமே, அதில் "அழகான காக்கையாரே, உன் இனிமையான குரலால் ஒரு பாட்டுப் பாடு" என நரி கூறுகிறதாகப் படித்தோமே!, இதன் நீதி என்ன? உனக்குத் தேவையானால் நீ "பசப்பு வார்த்தைகளை" பேசலாம். அல்லது பசப்பு வார்த்தைகள் பேசினால் தான் உன் தேவையை அடையலாமெனில் பேசு!!!.
இன்றைய உலகம் இப்போதனைகளைச் செவ்வனே கடைப்பிடிக்கிறது. சிலர் அடுத்தவரை ஏமாற்றுவது எப்படி என்பது பற்றியே சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் அரசியல்வாதிகள்,(ஆ)சாமிகள், தொழிலதிபர்களாகவும் உலா வருகிறார்கள். ஒரு சிலர் நம்மூடு சாதாரணமானவர்களாக வாழ்கிறார்கள்.
அவர்கள் சிந்தனை இலகுவாக சம்பாதிப்பது, எப்படி எனும் ஆய்விலிருந்து புதுப் புது வழிகளைத் தேடுகிறது. அவர்களுக்கு நவீன தொழில் நுட்பங்களும் கைகொடுக்கிறது.
இலங்கையில், நான் சிறுவனாக இருந்த போது உண்மையில் நடந்த சம்பவம்- அப்போ இலங்கை பூராகவும் மூட்டைப் பூச்சித் தொல்லை, கால் முறிந்து "பிளாஸ்டர் ஒவ் பாரிஸ்" சால் பத்துப் போட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, பத்துனுள் சென்று குடும்பம் நடத்திய மூட்டைப் பூச்சிகளின் கடி தாங்காது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யுமளவுக்கு செல்ல வைத்த மூட்டைப்பூச்சித் தொல்லை.
வீடுகளில் தெளிக்காத மருந்து வகையேயில்லை, புதுப் புது மருந்துகள் ,எவராவது இத் தொல்லை தீர்க்க வழி காட்டுவார்களா? என இலங்கை மக்கள் ஏங்கித் தவித்த காலமது.
அப்போ ஒருவர் சிந்தித்து விட்டார். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தச் செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்தார்.
"மூட்டைப் பூச்சியைக் கொல்ல" , என அந்த விளம்பரம் , தலைப்பிட்டு அவர் முகவரி கொடுத்து, தனக்கு ஒரு ரூபா பெறுமதியான தபாற்தலை, அனுப்பு வைத்தால் மூட்டைப்பூச்சியைக் கொல்லும் சாதனம் அனுப்பி வைக்கப்படும். அந்த விளம்பரத்தில் , அச்சாதனம் வெற்றியளிக்காவிடில், இந்த தபாற்தலை திருப்பியளிக்கப்படும். (அன்றைய நாட்களில் , இப்படியான கொடுப்பனவுகளுக்கு தபாற்தலையை பாவிப்பர்)
அவருக்கு லட்சக்கணக்கில் கடிதங்கள் குவிந்ததாம். அவர் அத்தனை பேருக்கும் , சாதனத்தை அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பிய கடிதத்துள், 2 அங்குல நீளம், 2 அங்குல அகலம், சுமார்1/4 அங்குல பருமனில் 2 மரப்பலகைத் துண்டும் , ஒரு சிறு காகிதத்தில் , அதை எப்படி இயக்குவதென, படங்களுடன் விளக்கக் குறிப்பும்
இருந்ததாம், அவ்விளக்கக் குறிப்பில் ஒரு பலகைத் துண்டைக் கீழே வைத்து, அதன் மேல் மூட்டைப்பூச்சியை வைத்து, 2 ம் பலகைத் துண்டால் நசுக்க வேண்டும். அதை அவர் அனுப்ப 25 சதத் தபாற்தலை ஒட்டியுள்ளார்; அச்சாதனத் தயாரிப்புக்கு, ஒன்றுக்கு இன்னுமொரு 25 சதம் ஆகக் கூடியது செலவு செய்தாலும், நிகர இலாபம் 50 சதம்; இப்படி லட்சக்கணக்கில் அவர் வசம்.
பலர் அச்சாதனத்தைத் தூக்கி கடாசிவிட்டு அடுத்த ஏமாற்றைத் தேடி ஓடிவிட்டார்கள்.சிலர் சட்ட ஆலோசனை தேடி, அவர் மேல் மோசடி வழக்குப் பதிவு செய்து விட்டார்கள்.
நீதிமன்ற விளக்கத்தில், அவர் கூறியது "நீதிபதி ஐயா, என் விளம்பரம் இதோ, அதில் குறிக்கப்பட்ட வாசகம்" மூட்டைப் பூச்சியைக் கொல்ல", என் சாதனத்தில் , நான் குறிப்பிட்டுள்ளது போல் செய்து மூட்டைப் பூச்சியைக் கொல்ல முடியாவிடில், நீங்கள் தரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்."
அவ்வழக்குத் தள்ளுப்படியானது.
ஆனால், அவர் நீதிபதியிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த மூட்டைப் பூச்சியன்றல்ல, பல விடயங்களில் தானும் ஏமாற்றப்பட்டேன். இந்த மூட்டைப் பூச்சிக்கு நான் கூட 10 க்கு மேற்பட்ட கடைகளில் கிடைக்கும், மருந்துகள் வாங்கி, என் பணம் தீர்ந்ததே ஒழிய மூட்டைப் பூச்சிகள் பல்கிப் பெருகிவிட்டன. என்னால் இந்த மருந்துத் தயாரிப்பாளர்களை எதுவுமே செய்ய முடியாது. அவர்கள் மருந்தில் "மூட்டைப் பூச்சியை முற்றாக ஒழிக்க" எனப் போட்டே விற்கிறார்கள். சுமார் 2 வருடமாக இந்த நாடு ,இந்த மருந்துகளைத் தெளித்து, இன்றுவரை அல்லாடுகிறதே!!! மூட்டைப்பூச்சி ஒழிந்ததா? ஆனால் அதே நிறுவனம் புதிய பெயரில் , இன்னுமொன்றை அறிமுகப்படுத்திக் கல்லாக்கட்டுகிறது.
ஆனால் அவர்களை எதுவுமே எவராலும் செய்யமுடியாது.
வெறும் சவர்கார நீரையும், டெற்றோலையும் கலந்து கூட விற்கிறார்கள். நமது அவலம் இவர்களிடம் சிக்க
வைக்கிறது.
அப்போதுதான் எனக்கு இப்படி யோசனை வந்தது.
அன்று,அவர் யோசனையைப் பலர் பாராட்டவே செய்தார்கள்.
அதனால் ஏமாற்றுபவர்களாகத் திருந்தினாலே இவை ஒழியும். ஆனால் பேராசை பிடித்த ஏமாறுவோர் இருக்கிறார்களே!!
நமக்கும் மின்னஞ்சல் வரும், சிரிப்பேன்.
என் சாதனத்தில் , நான் குறிப்பிட்டுள்ளது போல் செய்து மூட்டைப் பூச்சியைக் கொல்ல முடியாவிடில், நீங்கள் தரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்."//
Deleteஎப்புடி எல்லாம் ஏமாத்துறாங்க!! அடுத்தவங்களை எப்படி ஏமாத்தலாம்ன்னு எந்நேரமும் யோசிச்சுகிட்டே இருப்பாங்க போல!!!
"எவ்வளோ பெரிய மாத்திரை"!!!!!! நன்றி நண்பரே, வருகைக்கும் , பெரிய மறுமொழி பகிர்வுக்கும்....
Deletenalla irukku machchan ana sirippu sirippa varthu machchan enna NKS napagam varuthu machchan
ReplyDeleteநன்றி மச்சான்.வருகைக்கும், கருத்துரைக்கும். இன்னமும் மறக்க முடியலதான் "NKS"
Delete