எப்படி எடுத்தாலும்
எல்லா புகைப்படத்திலும்
அழகாய் இருக்கின்றனர்
குழந்தைகள்.
எப்படி கேட்டும்
அனுமதி கிடைப்பதில்லை
மழையில் நனைந்திட,
கொஞ்சும் மழலையில்
மிரற்றுவது போல்
கேட்கப்படுகின்றன
பதிலளிக்க இயலவிலா
கேள்விகள்.
எத்தனையோ முறை
எத்தனித்த கோபத்தை
நீர்க்குமிழியாய்
உடைத்துவிட்ட உன்
பொக்கைவாய் புன்னகைகள் ,
வாழ்வின் அர்த்தத்தையே
உணர்த்திவிடும்
எனக்கான உனது தருணங்கள் !!!!!!!
இயலவிலா//
ReplyDelete-இயலாக் -பொருத்தமா?
மழலைகளெல்லா!!!
அழகாக வந்துள்ளது.
இயலவிலா// என்பது பொருத்தமானதாக எனக்கு தோன்றுகிறது நண்பரே.. பொருட்பிழை ஏதும் இல்லையல்லவா? இருப்பின் கூறவும் திருத்திகொள்கிறேன் நண்பரே..
ReplyDeleteதங்களின் பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது. நன்றி நண்பரே. தொடர்க....