Monday, October 29, 2012

சிதறிய ரொட்டியும், தெறித்த ரெட்டியும் !!!

                                          ஓட்டுனர் உரிமம்  வாங்குவது என்பது வளைகுடா நாட்டு  வாழ்க்கையில் ஒரு மைல்கல்.பயிற்சி பள்ளியில் சில பூர்வாங்க  தேர்வுக்கு பின் நாம் சில தனியார்  காரோட்டிகளின் மூலம் பயிற்சி பெற்று பின் தேர்வுக்கு செல்லலாம்.
அப்படி தெரியாத்தனமா வந்து நம்ம நண்பர்கள்கிட்ட மாட்டுன ஒரு அப்பாவி ஆத்மா தான் "ரெட்டி " ஆந்திராகாரர். மதிய உணவு இடைவேளையின் போதோ அல்லது சாயந்திரம் எங்களுக்கு  வேலை முடிந்தபின்பு  பயிற்சி என்ற பெயரில் சித்திரவதை ஆரம்பமாகும் அவருக்கு.

 ஒரு நண்பன் நான் பெரிய அப்பாடக்கர், ஊரில் எல்லாம் வண்டி ஒட்டி இருக்கேன் சொல்லிட்டு அவரிடம் பயிற்சிக்கு போனான். ஒருமுறை  ரவுண்டானாவில் யு டேர்ன்  எடுக்குமாறு சொல்ல, நமது நண்பனும் எதுக்கு  அங்க எல்லாம் போய்  சுத்திகிட்டின்னு நினைச்சு ரவுண்டானா ஆரம்பமாகும் இடத்திலேயே போட்டான்  பாருங்க யு டேர்ன, அவ்வளவுதான் தெறிச்சுட்டார் நம்ம ரெட்டி.  அப்புறம் அவனுக்கு ஆனா ஆவன்னாலேருந்து ஆரம்பிச்சார். 

பொதுவாக ரவுண்டானா ஆரம்பத்தில் சற்று நிதானித்து வேறு வண்டிக்கு இடைஞ்சல் இல்லாமல் போக வேண்டும்.  ஒருநாள் ரவுண்டானா ஆரம்பத்தில் நிதானித்து வண்டியை மெதுவாக்கி , நம்மாள்  போகலாம் என்று நினைத்து வண்டியை கிளப்பும் போதே  ரெட்டி "பெட்ரோல் தேதோ" " பெட்ரோல் தேதோ" ன்னு அவசர கதியில் கத்த, ஹிந்தி தெரியாத நண்பன், போகச் சொல்கிறாரா, நிக்க சொல்றாரான்னு புரியாமல்  குழம்பி மிகச்சரியாக  நடுரோட்டில் நிறுத்தி விட்டான். பிறகுதான் தெரிந்தது  ஆக்சிலேட்டர்  குடு என்பதைத்தான் ரெட்டி அப்படி   சொல்லி இருக்காருன்னு.

 அதுலேருந்து  கொஞ்சம் பயத்துடனே நம்மாளு ரவுண்டானாவுல  வண்டி ஓட்டி  கொண்டு இருக்க, இதை கவனித்த ரெட்டி, ஒருநாள்  சாயந்திரம் ஒரு டீயையும் ரெண்டு ரொட்டியையும் வாங்கி கொண்டு வண்டியில் ஏறி,  ரொட்டியை டீயில்  நனைத்து சாப்பிட்டவாறே, நண்பனை உற்சாகப்படுத்துவதாக நினைத்து கொண்டு,  நான் இருக்கிறேன் அல்லவா பயப்படாதே நல்ல தைரியமா ஒட்டு என்று சொல்லி கொண்டு  இருக்க,  

நம்மாளு ஒரு ரவுண்டானாவில் வேகமா போவோம்னு நினைச்சு ஆக்சிலேட்டரை  ஒரு அழுத்து  அழுத்த , ரொட்டி தின்கிற சுவாரஸ்யத்துல ரெட்டியும்  கவனிக்காமல் விட, அடுத்த செகண்ட் வண்டி முன்னால  இருந்த "கர்பு ஸ்டோனை" எல்லாம் தாண்டி ரவுண்டானா நடுவில போய்  நின்னிருக்கு. கலக்கத்தோட நம்மாளு ரெட்டிய பார்க்க, ரொட்டி சிதறி,  டீயும் மூஞ்சு, ஒடம்பு   பூரா ஊத்தி இருக்க ,  ரெட்டி கண்ணாடிய பார்த்து அவரையே திட்டிக்க ஆரம்பிச்சாராம்.

பார்க் பண்ணியதும், யு டேர்ன் போட்டதும்....

ஆனா மானஸ்தங்க அந்த ரெட்டி!! அதுக்கு அப்புறம் எந்த ஒரு நெலமையிலையும், எங்களோட  போனை எடுக்கவே இல்லையே, எங்களோட பேர எவனாவது சொன்னா பயிற்சி கட்டணம் அதிகமா வசூலிக்கிறதா கேள்வி அவ்வ்வ்வவ் !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!



8 comments:

  1. friend licence vaangivitaara illaiyaa...

    ReplyDelete
    Replies
    1. கூட வந்த போலிஸையே ரெண்டு தடவை அலற வச்சு, மூணாவது டெஸ்ட்டுல வாங்கிட்டாரு!!!!! (இப்போ ரோட்டுல போறவங்க அலறுறாங்க ஹி ஹி ஹி.....)

      Delete
  2. பிளக்ஸ்ஸில் தனி மனித தாக்குதல் கூடாது. இருந்தாலும் வெ.கு.உடையாரையும் என்னையும் பற்றி உலகரியச் செய்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. என்ன இப்படி சொல்லிட்டேள்!!! எல்லாம் ஒரு சேவை மனப்பான்மைதான் போங்க !!!! வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி யாஸிர்...

      Delete
  3. aama friend friend enkireerkalea antha friend neenga thaanea....

    ReplyDelete
    Replies
    1. கம்பெனி ரகசியத்தை வெளிய சொல்லாதீங்க அனானி!!!!!!!!!!வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி.

      Delete
  4. Still laughing.. Nice one

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பா..

      Delete