நம்மில் எத்தனை பேருக்கு ஏழூர் அய்யாசாமி அல்லது ஜாதவ் பயாங் பற்றி தெரியும். நமக்கு ஒருவரை பற்றி தெரியவேண்டுமானால் அவர்கள் ஒரு அரசியல்வாதியாகவோ, சினிமா பிரபலமாகவோ அல்லது கிரிக்கெட் வீரராகவோ இருக்க வேண்டும். இவர்கள் அப்படி கிடையாது ஆனால் அதை விட மேலானவர்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.
அசாமை சேர்ந்த ஜாதவ் பயாங் ஒரு தனி மனிதனாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு
காட்டையே உருவாக்கியவர் . மரங்கள் வளர்வதற்கு ஏற்றதாக இல்லை என்று வனத்துறையால் கைவிடப்பட்ட
இடத்தில்தான் இவர் இதை உருவாக்கி காட்டியுள்ளார். நினைத்து பாருங்கள் ஒரு எளிய, தனி மனிதனின் முயற்சி எப்பேர்பட்ட காரியத்தை சாதித்துள்ளது .
இன்னொருவர் நம்ம ஊர்க்காரர் ஏழூர் அய்யாசாமி சத்தியமங்கலம் அருகே இவர் கிட்டத்தட்ட ஒரு 10000 மரங்களை பொது நல நோக்கோடு வளர்த்துள்ளார் . இவரும் ஒரு எளியவர் . தண்ணீர் தட்டுப் பாடு உள்ள கோடைகாலத்திலும் வீட்டிலிருந்து தண்ணீர் ஊற்றி வளர்த்துள்ளார். நாம் என்ன செய்தோம் அவர் வளர்த்ததில் 7000 மரங்களை திட்டமிட்டு வெட்டினோம்.
இத்தகைய செய்திகளை பார்க்கும் போது படிக்க நேரமில்லாமல் கடந்து விடுகிறோம் அல்லது படித்துவிட்டு அதிகபட்சமாக அவரை மனதிற்குள் பாராட்டுகிறோம் அவ்வளவுதான்.
நிற்க நேரமில்லாமல் நாம் ஓடி உழைத்துக் கொண்டிருப்பது யாருக்காக ? நமது அடுத்த தலைமுறைக்காகத்தானே! நம்மை விட மேம்பட்ட ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு கொடுக்கத்தானே நாம் இவ்வளவு போராடுகிறோம் . ஆனால் உண்மையில் நாம் அவர்களுக்கு என்ன கொடுக்க போகிறோம் தெரியுமா?
மலடாக்கப்பட்ட மண்.
ஓட்டையிடப்பட்ட ஆகாயம்.
ஆழ்துளையிட்டாலும் கிடைக்காத நிலத்தடி நீர்.
கற்பழிக்கப்பட்ட காற்று .
என பஞ்ச பூதங்களையும் நாசமாக்கிவிட்டோம் நெருப்பைத்தவிர . சொல்லுங்கள் இதை கொடுக்கவா நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ?
முன்பு இலவசமாய் ,சாதாரணமாய் கிடைத்தவை எல்லாமே இப்போது காசு கொடுத்து வாங்குகிறோம். சொல்லமுடியாது நமது அடுத்த சந்ததி காற்றை கூட காசு கொடுத்து வாங்கும் நிலை வந்தாலும் வரலாம்.
இவை அனைத்தையும் மரம் வளர்ப்பதின் மூலமாக சரி செய்ய இயலும். நகரத்தில் வாழ்கிறேன் என்னால் இங்கு செய்ய இயலாது என்று சப்பைக்கட்டு கட்டினாலும், நாம் நினைத்தால் சாதிக்க இயலாது ஒன்றும் இல்லை நண்பர்களே . நமக்கெல்லாம் ஒரு வேர்பிடிப்பாய் கட்டாயம் நமது கிராமங்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அங்கு செய்யுங்கள். எதுவுமே செய்ய இயலாது என்றால் குறைந்த பட்சம் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.
முடிந்தவர்கள் செய்யட்டும்.முடியாதவர்கள் உதவட்டும்.
ஒன்று ஒன்றாய் தான் நூறு.
சிறு துளி பெரு வெள்ளம்.
சிறு விதை பெரு விருட்சம் !!!
தனிமரமும் தோப்பாகும் நண்பர்களே நாம் மனது வைத்தால் !!!
வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!
வெரிகுட்....
ReplyDelete#ஐயாசாமிய முன்னாடியே தெரியும்யா.... நாங்கெல்லாம் ஒண்ணாப்பு ஒண்ணாப் படிச்சோம்....
அப்படியாண்ணே எனக்கு தெரியாம போச்சே. அப்ப நீங்க ரொம்ப பெரிய ஆளுதான் !!!!! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிண்ணே !!!!!!!!
Deleteமலடாக்கப்பட்ட மண்.
ReplyDeleteஓட்டையிடப்பட்ட ஆகாயம்.
ஆழ்துளையிட்டாலும் கிடைக்காத நிலத்தடி நீர்.
கற்பழிக்கப்பட்ட காற்று .
அருமையான கருத்துள்ள கவிதை...நெற்றியில் அடித்தமாதிரி..எப்படி சிந்தித்தீர்கள்.. ம்லடாக்கப்பட்ட மண்...கற்பழிக்கப்பட்ட காற்று...சூப்பர்.
ஆமாங்க, மரவள்ர்ப்பைப்பற்றி ஒவ்வொருவரும் அக்கரை காட்டவேண்டும்..நீர் இன்றி அமையாது உலகம்...மரம் இல்லாமல் மழை இல்லை இந்த உண்மையை எல்லோரும் புரிந்துக்கொள்ளல் அவசியம்.பணம் சம்பாதிப்பதில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம்..பணத்தை வைத்து எவ்வளவு விலையானாலும் வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். எதை வாங்குவது..மழை இன்றி பயிர் ஏது, விவசாயம் ஏது...அப்புறம தானியம் ஏது...நிச்சியமாக பணத்தை சாப்பிட முடியாது..மரநடுதலின் அவசியத்தி உணர்த்தி ஒரு கட்டுறை. பாராட்டுகள்.பொன்.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!!!
Deleteஅழகாக ஒரு குட்டு.
ReplyDeleteஆனால், மறக்கல சார், வாங்க, வந்து பாருங்க என் பதிவுக்கு.
;-)
http://www/gardenerat60.wordpress.com
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!!!
Delete