Saturday, October 20, 2012

நண்பனும் தங்கையும் !!!

                                                             பாசமலர் படத்தை பார்த்து கெட்டு  போன பயபுள்ளைகள்ள  நம்ம நண்பனும் ஒருத்தன் . சின்ன புள்ளையில  தங்கச்சிக்கு ஒண்ணுன்னா மொத ஆளா நிப்பான். ஏதாவது தப்பு செய்ததற்கு   தங்கச்சியை அடிக்க அவங்க அம்மா கம்பை எடுத்தா , தங்கச்சி அழுவுதோ இல்லையோ  நம்மாளு அழ ஆரம்பிச்சுடுவான். 

அம்மா வேண்டாம்மா,  அம்மா வேண்டாம்மா  ன்னு சொல்லி  அவங்க அம்மா கைய புடிச்சு தொங்கி கிட்டு இருப்பான். பொறுத்து பொறுத்து பார்த்த அவங்க அம்மா, அவன் தங்கச்சி ஏதாவது தப்பு பண்ணினா மொதல்ல இவனை புடிச்சு வெளுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அவனோட அறிவுக்கும், பண்ற சேட்டைக்கும்  வாரத்துக்கு ஏழு நாள் மட்டும் தான் அடிவாங்குவான். இப்போ பாசமலர் தங்கச்சியோட அடி கணக்கு வேறயா !! அதுனால கணக்கு வழக்கில்லாமல் அடிவிழும். போதும் போதுங்கிற அளவுக்கு அடி குடுத்து,  கடைசியா ஏதாவது தின்பண்டத்தை குடுத்து  விட்டுருவாங்க!!!.எந்த நேரமும் அழுகையும், தீனியுமாதான்  அலைவான் நம்ம பங்காளி.

ஒருநாள்   உலையில அரிசியை போட்டுட்டு,  தங்கையிடம் கொஞ்ச நேரம் கழித்து பக்கத்துக்கு வீட்டு அத்தையை கூப்பிட்டு சோறு வடிக்க சொல்லிவிட்டு  அவங்க அம்மா  ஒரு  கேதத்துக்கு போய்விட, விளையாட்டு மும்முரத்தில் தங்கையும் மறந்து விட, சோறு பொங்கலாயிருச்சு. அதுவும் அவங்க அம்மா வந்து பார்த்தா பின்னாடிதான்  தெரிஞ்சது .

கடுப்பான அவங்கம்மா கம்பை எடுத்து ப்ரோட்டோ கால் படி நம்ம பங்காளியை அடிக்காமல் நேரடியாக  அவன் தங்கச்சியை  அடி வெளுக்க ஆரம்பிக்க,
நம்மாளு தங்கச்சியை காப்பற்ற வேண்டுமென்ற கடமை உணர்வோடு  கம்பை அவங்க  அம்மாவிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஓட, என்றுமில்லாத கோபத்தில் அவங்க அம்மாவும் விரட்ட, சிக்கினா சின்னாபின்னமாயிருவோம்னு  தெரிஞ்சு  நம்மாளு ஓடி வீட்டு கூரை    மேல ஏறிட்டான் . வேகமா வந்த அவங்க அம்மா கால் தடுக்கி விழுந்து கல் ஒரல்ல மோதி மண்டை ஒடஞ்சு ரத்தம் ஊத்துது. 

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு வந்தவர்கள் , இவனை திட்ட  இதை எதிர்பார்க்காத நம்மாளு, டென்ஷனாகி  அழுதுகிட்டே இதுக்கெல்லாம் காரணம் இவதான்னு சொல்லிட்டு ஒரு ஓட்டை எடுத்து அவன் தங்கச்சி தலையில போட  அவ மண்டையும் ஒடஞ்சு ரத்தம் ஓட ஆரம்பிச்சது.

அப்புறம் என்ன அவன் ஓட ஆரம்பிச்சுட்டான்.   ஊரே ஒன்னு  கூடி அவனோட வீர தீர பிரதாபங்களை பேச அவங்க அப்பா அடுத்த வாரத்துல அவனை கொண்டு போய் ஹாஸ்ட்டல்ல சேர்த்து விட்டாங்க.  நம்மளுக்கு ஸ்நாக்ஸ் வரத்து கம்மியாயிருச்சு ஹி ஹி ஹி ..... !!!!!!


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!







9 comments:

  1. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான் இல்லையா...!

    ஆனா சிப்ஸ் போச்செய்யா நமக்கு ஹி ஹி...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. அந்த கவலை எனக்கு ரொம்ப நாளா இருந்துச்சு நண்பா. வருகைக்கும், மறுமொழிட்டமைக்கும் நன்றி நண்பா!!!!!!!

      Delete
  2. Replies
    1. வருகைக்கும், மறுமொழிட்டமைக்கும் நன்றி நண்பரே !!!!!!

      Delete
  3. உங்கள் எழுத்து நடை அருமை நண்பா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், மறுமொழிட்டமைக்கும் நன்றி நண்பா !!!!!!

      Delete
  4. unga kavalai ungalukku...

    chaa vada poachea .pon

    ReplyDelete
  5. வடை மட்டுமில்ல நண்பா, பல ஐட்டங்கள் போயிருச்சு!!!!! வருகைக்கும், மறுமொழிட்டமைக்கும் நன்றி நண்பரே!!!

    ReplyDelete