பின் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல !!!!!
1. எங்கெங்க ட்ரான்ஸ்பார்மர் இருக்கோ அங்கெல்லாம் எதோ ரிப்பேர் வேல பார்க்குறமாதிரி நல்லா சீன் போடுங்க .
நாங்களும் சரி சரி இந்த வேல முடிஞ்சோன்ன சீசன்ல குற்றாலத்துல தண்ணி வந்து பாயுறமாதிரி கரண்ட் வந்து பாயும்ன்னு நெனைச்சி நாங்களும் மனச தேத்திக்கிவோம் . ஒரு ஏரியாவுல ஒரு ட்ரான்ஸ்பார்மர் வேலை முடிஞ்சதும் அதே ஏரியாவுல அடுத்த நாள் அடுத்த ட்ரான்ஸ்பார்மர் வேல பார்க்க ஆரம்பிக்கணும். (நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும் மங்குனியாரே !!!!)
2 . கரண்ட் எப்போ வரும்ன்னு போட்டி ஒன்னு வைச்சு எல்லாரையும் sms அனுப்ப சொல்லலாம். யாரு சரியா கணிச்சு சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு பன்னெண்ண்ண்ண்ண்ண்.............
3 . டிவியும் இல்ல பொழுது போக, அதுனால தெருமுனையில, ஜங்க்ஷன்ல ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட, போட்டியில ஆடுனவுங்களை ஆட விட்டிங்கன்னா மக்களுக்கு பொழுதும் போகும், கொஞ்சம் கோபமும் கொறையும்.
4. எல்லா டிவியிலையும் வீராசாமி,லத்திகா போன்ற உன்னத திரை காவியங்களை திருப்பி திருப்பி போட சொல்லலாம், தப்பி தவறி உங்களுக்கு தெரியாம கரண்ட் இருந்துச்சின்னாலும், அந்த படத்த பாக்குறவங்களுக்கு டிவி பார்க்குற ஆசையே போயிரும். உங்களுக்கும் கரண்ட் மிச்சமாகும். (சொல்ல முடியாது நம்ம பவர் ஸ்டார் புளகாங்கிதம் அடைஞ்சு கட்சிக்கு நிதி ஏதாவது குடுப்பாரு.)
5 . காலேஜ் டே, பஸ் டே மாதிரி "பவர் கட் டே" என்று புதுசா ஒன்ன ஆரம்பிச்சு பகல் நேரத்துல கொண்டாடலாம். சாக்லேட்டுக்கு பதிலா மெழுகுவர்த்தி குடுக்கலாம். என்ன ஒன்னு இதை வாராவாரம் கொண்டாடனும்.
6. அம்மா இலவசமா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி எல்லாம் இந்த ஆட்சியிலையும், கரண்ட அடுத்த ஆட்சியிலையும் தருவதா ப்ளான் பண்ணி இருக்காங்கலாம் . ஏம்மா நீங்க இதையெல்லாம் தர்றதை நிறுத்திட்டு, மெழுகுவர்த்தி, சிம்னி விளக்கு, பெட்ரோமாக்ஸ் லைட் , இதுகள தாங்களேன் எங்களுக்கு உபயோகமா இருக்கும். அப்புறம் யாராவது கரண்ட் வேணும்ன்னு கேப்பாங்களா என்ன??
அய்யா அஞ்சு வெரலக்காட்டி ஓட்டு கேட்டப்ப நாங்களும் உதயசூரியனை சொல்றாருன்னு நினைச்சு ஒட்டு போட்டோம், ஆனா அவரு அஞ்சு மணிநேரம் பவர் கட் பண்ணினாரு.....
அதே மாதிரி அம்மா ரெண்டு விரல காட்டி ஓட்டு கேட்டப்ப , நாம கொஞ்சம் சுதாரிச்சு சர்தான் அம்மா பவர் கட்ட ரெண்டு மணிநேரமா கொறைக்க போறாங்கன்னு அப்பாவியா நெனைச்சுகிட்டு அவங்களுக்கும் ஓட்டை போட்டு தொலைச்சிட்டோம். இப்பதான் புரியுது அந்த ரெண்டு வெரலுக்கு அர்த்தம், ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் பவர்ன்னு ...... என்ன கொடுமை சரவணா இது !!!!!!
ஒட்டு வாங்குறப்ப அஞ்சு விரலையும் , ரெண்டு விரலையும் மாத்தி மாத்தி காமிச்சி இப்போ எங்களுக்கு நடு விரலை காமிச்சுட்டீங்களே இது நியாயமா ???!!!!!!!!!!!!
வாழ்க வளமுடன்!! தமிழ் தந்த புகழுடன் !!!