பெரும்பாலான
நமது உரையாடல்களில் உனது
“ம்“ என்ற
ஒற்றைச்சொல்லே பதிலாய் அமையும்!
விழிகளில்
தெரிக்கும் அனலே பலநேரங்களில்
மௌனியாக்கிவிடும்
எனை!
எதுவும்
யாசித்தது இல்லை இதுவரை
நீ எத்தனையோ
கேட்டும்!
உனது
விருப்பத்தையே எனதாக்கிகொண்ட
எத்தனையோ
தருணங்கள் பரிகசிக்கப்பட்டுள்ளன!
அத்தி
பூத்தாற்போல வரும் விவாதங்களில்
தேர்ந்தெடுத்த
சொல்லாடல்களினால்
வென்றெடுக்கின்றாய்
எனை!
சொல்ல
நினைத்து தொண்டை குழிக்குள்
சிக்கிக்கொண்ட
வார்த்தைகள்
காற்றுடன்
மட்டுமே கதைக்கின்றன
எப்போதும்
நல்லவனாகிவிடும் உன்னைப்பற்றி !!!!!
வாழ்க வளமுடன்... தமிழ் தந்த புகழுடன்......
வாழ்க வளமுடன்... தமிழ் தந்த புகழுடன்......
பின்னுரேழ் போங்கோ. இத படிச்சிட்டு உங்கள பாத்து பயந்து
ReplyDeleteவைரமுத்துக்கு வயித்தால போகனும்,
நா.முத்துகுமார் நாக்குதள்ளி நிக்கனும்,
வாலி வாயடச்சு போகனும்.
எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் போங்க :-)
Deleteஅங்கு பேசமுடியவில்லையென்றாலும்
ReplyDeleteகவிதையில் சிறப்பாகப் பேசிவிடுகிறீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி.. தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும்......
Deleteசிறப்பான கவிதை !!! தொடருங்கள்
ReplyDeleteதங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி கவிஞரே....
Deleteசொல்ல நினைத்து தொண்டை குழிக்குள்
ReplyDeleteசிக்கிக்கொண்ட வார்த்தைகள்
காற்றுடன் மட்டுமே கதைக்கின்றன.
படிக்கும் விழிகள் பேசிவிடும் அருமை.
மிக்க நன்றி.வருகைக்கும்,வார்த்தைகளுக்கும்....
Delete