Wednesday, April 4, 2012

தமிழ் எங்கள் உயிர், ஹிந்தி எங்கள் _ ​ _ _


சென்னைல வேலை பார்க்கும் போது கொஞ்சம் ஹிந்தி பேசும் மக்களும் என்கிட்டே வேலை பார்த்தாங்க, அவங்க கிட்ட பேசும் போது மேல சொன்ன வார்த்தை கூட கடைசில ரைமிங்கா ஒரு வார்த்தைய சேர்த்து பேசுறது ரொம்ப பிரசித்தி !!! 
அப்படி எல்லாம் பேசுனதுக்கு வட்டியும் மொதலுமா துபாய்ல கிடைச்சது பெரிய பெரிய  பல்ப்  ....    

 நான் வேல பார்க்கிற சைட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு ஒரு வண்டி வரும். கொஞ்ச நாள்ல நல்லா இருக்குறியா, என்ன செய்ற அப்படின்னு கொஞ்சம் போல ஹிந்தில பேசுறது... அந்த ஓட்டுனர் அவன் சொந்த கதை அப்படி இப்படின்னு கொஞ்சம் மொக்க போடுவான்...நம்மளுக்கு புரியுதோ இல்லையோ ஆமாம்  போடுறது .... ஒருநாள் காலையில வரும் போது மாப்ள கொஞ்சம் டல்லா வந்தான் ..என்னடா ஆச்சுன்னு கேட்டேன், ஏதோ சொல்ல ஆரம்பிச்சான், அவன் சொன்னதுல நம்மளுக்கு புரிஞ்சது என்னன்னா , நேத்து சாயந்திரம் வேகமா போனேன் கேமரா ,பிளாஷ்  அப்படின்னு ... இது போதாதா  நம்ம   கற்பனை குதிரைய தட்டி அவன் ஒரு கேமரா வாங்கி இருக்கான்னு நெனைச்சுகிட்டு , ஒ அப்படியா .. வெரி குட், என்ன பிராண்ட் , எங்க வாங்கின அப்படின்னு ரொம்ப சந்தோசமா  கேட்க அவன் மூஞ்சி போன போக்க பார்க்கணுமே... சரி எதோ அடிப்படையிலே தப்பு நடந்து இருக்குன்னு  புரிஞ்சுகிட்டு வராத போன அட்டென்ட் பண்றமாதிரி பாவ்லா பண்ணிட்டு வண்டிய விட்டு இறங்கியவுடன் கூட வந்த இன்னொரு பட்டானிடம் கேட்ட போது தான் புரிந்தது அவன் ஓவர் ஸ்பீடில் சென்றதால், ஸ்பீட் கன்ட்ரோல் காமிராவில் அவன் வண்டி பதிவாகி விட்டது [அப்படி பதிவாகும் போது பிளாஷ் வரும் ] அதற்கு அபராதம்  நமது ரூபாய் மதிப்பில்  7500  கட்ட  வேண்டுமாம். அதை சொல்லி அவன் புலம்பும் போது நான் என்னடாவென்றால்   வெரி குட், என்ன பிராண்ட் அப்படி எல்லாம்  கேட்டால் எப்படி இருக்கும் !!!! நல்ல வேளை வேற எதுவும் திட்டாம விட்டானேன்னு நெனைச்சுகிட்டு  நம்மளோட ஹிந்தி புலமைக்கு நானே ஒரு சபாஷ் போட்டுட்டு வேலைய பார்த்தேன்.       

     **********               ****************                  *************               
வேலைக்கு சேர்ந்த  புதுசுல  வர விடுமுறைய கொண்டாட நண்பர்களின்  ரூமுக்கு வரசொல்லி  இருந்தாங்க, எங்கே இருந்து டாக்ஸி எடுக்கணும், எங்க இறங்கனும் எல்லாம் தெளிவா சொல்லி  இருந்தாங்க, கூடவே டாக்ஸி கட்டணம் எவ்வளவு ஆகும்ன்னு சொல்லி இருந்தாங்க, டாக்ஸி- ல பட்டான்  டாக்ஸி ன்னு ஒன்னு இருக்கு, நம்மளுக்கு ரொம்ப பிடிக்காத பக்கத்துக்கு நாட்டுகாரன்  ஓட்டுறது, அதுல மீட்டர் எல்லாம் இருக்காது நம்ம ரேட்  பேசிட்டு ஏறிக்க வேண்டியதுதான், என்ன ரெண்டு வாரம் குளிக்காம மூணு வாரமா தொவைக்காத ட்ரெஸ்ஸ போட்டுட்டு இருப்பான் அத மட்டும் நாம சகிச்சுக்கனும்  மத்தபடி ரேட் கம்மியா இருக்கும்... மொழிதெரியாத நம்மள மாதிரி எவனாவது சிக்குனா அவனுக்கு கொண்டாட்டம்.... இத எல்லாம் நமக்கு சொல்லி குடுத்து, ஒரு  15 இல்ல  20  கேட்பான் ...  அவன் ரேட் கூட  சொன்ன அதிக  பட்சமா   நீ பீஸ் திராம்ன்னு   [20 dhs]  சொல்லிட்டு ஏறிக்க அப்டின்னாங்க..    நானும் ரொம்ப கெத்தா வந்து ஒரு பட்டான் டாக்ஸி காரன்கிட்ட எவ்ளோன்னு கேட்க அவன் பந்த்ரா திராம்ன்னு[15 dhs]   சொல்ல, அவன்  கட்டணத்த அதிகமா சொல்றான்னு நெனைச்சுகிட்டு, இல்ல இல்ல   [20 dhs]     அப்படின்னு நான் சொல்ல அவன் என்னைய மேலயும் கீழயும் பார்த்துட்டு  சரின்னு சொல்லிட்டான்.எறங்க போறப்ப  நீ மதராசியான்னு  கேட்க எனக்கு முகம் கொள்ளா சந்தோசத்தோட [பின்னே திரை கடலோடி திரவியம் தேடுன்னு சும்மாவா  சொன்னான்,, தமிழன் பேர நாட்டிடாண்டா ன்னு நெனைச்சிக்கிட்டு ]  ஆமாம்ன்னு  சொல்லிட்டு   எறங்கிட்டேன்.

வழக்கம் போல கொஞ்ச நேரம் கழிச்சு தான் நம்ம சிறு மூளை வேல செஞ்சது, அவன் அத நக்கலா கேட்ட மாதிரி இருந்துச்சேன்னு நெனைச்சு  நம்ம நம்ம நண்பர்கள் கிட்ட கேட்ட போதுதான் விஷயமே தெரிஞ்சது.. அவன் கொறச்சு கேட்டு நான் கூட குடுத்ததும்..    அப்புறம் முக்கியமா நம்ம  நாட்டுலேர்ந்து  ஒருத்தன் ஹிந்தி தெரியாம வர்ரான்ன அது ஒரு தமிழனா தான் இருப்பான்றதும்.. !!!!!!!!! 

  வாழ்க வளமுடன்  தமிழ் தந்த புகழுடன் !!!!!

6 comments:

  1. அச்சா, அச்சா, பஹூத் அச்சா.

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி...அசடு வழியுது யாசிர் ....

      Delete
  2. 1965 ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பைக்கொண்டு பலனடைந்தவர்கள் தி.மு.க.கட்சினர் கூட இல்லை.கருணாநிதியும் அவரது பேரன் தயாநிதி மாறன் மட்டுமே.
    அதனை இப்போது பார்க்கும் சிலா் இன்னும் ஹிந்தியை எதிர்க்கின்றனரே.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது யாரேனும் ஹிந்தி படிப்பதை எதிர்த்தால் அது முட்டாள்தனமே. ஆனால் அடிநாதமான நமது தாய்மொழியாம் தமிழை சிறப்பாக கற்றுத்கொள்ளவும் வேண்டும் . வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும் நன்றி நண்பரே..

      Delete
  3. தமது தாய்மொழியை பிழையின்றி யாரால் பேச எழுத படிக்க இயலுமோ அவர்களால் தான் பிற மொழிகளை சுலபமாகக் கற்றுக்கொள்ள இயலும்.
    தமிழை உயிரெனக் காதலிப்போம்.பிற மொழிகளையும் நேசிப்போம்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறுவது சரிதான் நண்பரே.. மறுமொழியிட்டமைக்கு நன்றி...

      Delete