நம்மள ரொம்ப கடுப்பு கிளப்புற விஷயத்துல ஒன்னு படிக்க சொல்றது இன்னொன்னு அலுவலகத்துல மீட்டிங் போடுறது....மீட்டிங்குன்னா சமோசா தின்னுட்டு சீட்ட தேச்சிட்டு போறது இல்ல
....நம்மள அத ஏன் பண்ணல??? இத ஏன் முடிக்கல ன்னு?? கேட்டு
சாகடிச்சுடுவானுங்க .. ரொம்ப கொடுமை என்னன்னா அவங்க மீட்டிங் போடுறது ஆறு
மணிக்கு மேல , அப்புறம் அவங்க பேசுறது எல்லாம் அரபி மொழியில .. கடைசியா
நம்மள மாதிரி ஒரு சில நல்லவங்கள பார்த்து ஓகே வா ? அப்படின்னு கேப்பாங்க
. .. அங்கயும் நம்ம சிங்க குட்டிகள் அசராம ஓகே ஓகே .. அப்படின்னு சொல்லிட்டு
நாங்களே சிரிச்சுக்குவோம் .... கடைசியா ஏதாவது ரொம்ப முக்கியமான விசயம்னா
ஒரு புண்ணியவான் மொழி பெயர்த்து சொல்லுவான்.... இல்லைன்னா அதுவும் இல்ல...
நாங்களாவது பரவாயில்ல ஒரு அஞ்சாறு பேரு இருப்போம்.... சின்னதா சிரிக்கவாச்சும் செய்யலாம் .. எங்க கூட ஒரு அமெரிக்கன் இருந்தான் அவன் பாடு ரொம்ப திண்டாட்டம்... நாங்க ஆமாம் சாமி போடும்போதெல்லாம் வாட்? வாட்? ன்னு கேட்டு நம்மள கொன்னுடுவான் . அதுக்கு அப்பறம் எவனும் அவன் பக்கத்துலேயே உட்காரது கிடையாது .. அவனும் எல்லார் வாயையும் பார்த்துட்டு எந்திரிச்சு போய்டுவான்...
நம்ம நண்பன் கொஞ்ச காலம் இத பார்த்துட்டு ஒரு நாள் மீடிங்குல இருக்கும் போது எங்கிட்ட சொன்னான், மச்சான் ஒரு எனக்கு ஒரு கால் பண்ணு என்றான், கால் வந்தவுடன் எனது டேமேஜர பார்த்து ஐ எஸ் டி கால் என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.. வேலை நேரம் முடிந்து விட்டதால் அவரும் அவனை விட்டுட்டு எங்கள வறுத்து எடுத்துட்டார் வழக்கம் போல ...
அடுத்து வாரம் மீட்டிங்குக்கு வரும் போதே இன்னைக்கு பல்ப் எதுவும் வாங்க கூடாதுன்னு வந்தேன். என் நண்பனும் பவ்யமா என் பக்கத்துல உக்கார்ந்துகிட்டு கொஞ்சம் நேரம் போனவுடன் மச்சான் கால் பண்ணுடா என்றான் , நான் ரொம்ப பந்தாவா இல்லன்னு தலைய ஆட்டினேன்.. கொஞ்ச நேரம் என்னையே பார்த்துட்டு அவன் மொபைல எடுத்து அவனோட ரிங் டோன ஒலிக்க வச்சுட்டு வழக்கம் போல வெளிய போய்ட்டான்..
அப்புறம் என்ன நான் வழக்கம் போல பல்ப் வாங்கிட்டேன்.
*** *** *** ***
இன்னைக்கு காலையில அலுவலகம் வந்து கார பர்க்கிங்குல விட்டுட்டு உள்ள வந்த கொஞ்ச நேரத்துலேயே நம்ம ஆபீஸ் டிரைவர் வந்து எந்து சாரே வண்டி எங்கனே பஞ்சர் ஆயின்னு மலையாளத்தில சம்சாரிக்க, நானும் ரொம்ப ஆர்வபட்டு எந்த வீல்? முன்னாடியா இல்ல பின்னாடியா ?? ட்ரைவர் சைடான்னு கேள்விக்கணைகள் தொடுக்க... என் நண்பன் ஒருவன் பல்ப்ப காமிச்சு சிரிச்சுட்டு போய்ட்டான் . சரி இன்னைக்கு வேற யாரையாவது பலிகட ஆக்கணும் இல்லைன்னா நம்மதான் ஊறுகான்னு நெனைச்சுக்கிட்டு அடுத்த பலி ஆட்டுக்காக காரிடார்ல நின்னுக்கிட்டு இருந்தேன், அப்பத்தான் நம்ம செகரட்டரி நாலு அடில வந்துகிட்டு இருந்தான். நாலு அடிங்குறது அவன் உயரம் இல்ல அவனோட அகலம்!!!. வந்தவன் ஒரு வணக்கத்த வச்சிட்டு உள்ளே போக நான் ரொம்ப சீரியசா என்ன ஆச்சு உன் சட்டையில பின்னாடி எதோ கறுப்பா ஒட்டி இருக்குன்னு சொல்ல, அவன் எட்டாத கைய வச்சிக்கிட்டு இங்கயா அங்கேயா ன்னு கேட்டு ஒரு கட்டத்துல சர சரன்னு சட்டைய கழட்டிடான். இதுல நம்ம ஆபீஸ் பாய் ஒரு கப்ல தண்ணியும் கொண்டு வர, அதே நேரத்துல நம்மளோட டேமேஜரும் உள்ள வர , ஆகா.. ஆகா ..ஒரு ஆறடி உயரத்துல நாலடி அகலத்துல சட்டை இல்லாம நம்ம செகரட்டரி நிக்க அதுக்கு பக்கத்துல ஆபீஸ் பாய் கைல தண்ணியோட நிக்க இவங்க ரெண்டு பேர சுத்தி நாங்க எல்லோரும் நிக்க ஒரே அமர்க்களம்.... நம்ம டேமேஜர் அதிசயமா நல்ல மூடுல இருக்க அனைவரும் சிரித்தபடியே சென்று விட்டோம் அந்த செகரட்டரிய தவிர .........
கொஞ்சம் லேட்டாக வந்த நண்பனின் முகம் சுரத்தில்லாமல் இருக்க நான் ரொம்ப கேட்டபிறகு சொன்னான் " ஒண்ணுமில்ல மச்சான் நம்ம HR மேனேஜர டெர்மினேட் பண்ணிட்டதா சொன்னாங்க, நானும் ரொம்ப சந்தோசப்பட்டு அவனுக்கு போன போட்டு கொஞ்சம் கலாசிட்டேன் அப்புறம் தான் சொல்றாங்க இன்னைக்கு ஏப்ரல் பூல்ன்னு."
வாழ்க வளமுடன் ...... தமிழ் தந்த புகழுடன்

No comments:
Post a Comment