Tuesday, August 28, 2012

அக்காவை அதிகம் பிடித்த நாட்கள் !!!


                                                உனக்கு நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை  ஆனால் எனக்கு நன்கு நினைவில் உள்ளது நீ சிறுவயதில்  கைகளில் பிரில் வைத்த ரோஸ் கலர் பாவாடை சட்டை அணிந்து   வளைய வந்த நாட்கள்.   நீ வாசலில் கூட்டி  பெருக்கி கோலம் போட எத்தனிக்கையில் அதற்கு  இடைஞ்சலாக மட்டுமே நானிருப்பேன் உன்னை பெருக்க விடாமல் உன் கழுத்தை கட்டிக்கொண்டோ அல்லது  நீ கோலம் போட வைக்கும் புள்ளிகளுக்கு இணையாக நானும் எதாவது புள்ளிகளை வைத்துக்கொண்டோ இருப்பேன்.

உன் வயதையொத்த தோழிகள் என்னை ஏதாவது சொன்னாலும் அதை சிரித்துக் கொண்டே தவிர்த்துவிட்டு "என் தம்பி " இவன் என்ற வாத்சல்யத்தோடு  பார்ப்பாய் என்னை .    எவ்வளவு தான் உன்னை தொந்தரவு செய்தாலும் அம்மா இவனைப் பாருங்கம்மா என்றதொரு செல்ல சிணுங்கலுடன் நிறுத்தி விடுவாய் !!! அந்த சிணுங்கலுக்காகவே  உன்னை மீண்டும் மீண்டும் சீண்டுவேன் நான்.

                                                          பள்ளியில் இருந்து நீ நடந்து வந்ததால் கால் வலிக்கிறது என்றவுடன் தினமும் உன்னை தூக்கி கொண்டு போய் விட்டுவிட்டு  வந்த தாத்தாவும், என் பேத்தி ,என் பேத்தி  என எங்கு போனாலும் உன்னை கூட்டி திரிந்த ஆயாவும் , மகளுக்கென்று அப்பாவால்  ஸ்பெஷலாக வாங்கி வரப்படும் கோலாலம்பூர் லக்ஸ் சோப்பும் , டீச்சர் ஒருமுறை உன்னை கிள்ளியதால் அந்த டீச்சருடன் சண்டைக்கு போன அம்மாவும்  என எல்லோருக்கும்   செல்லமாக நீ இருந்தாலும், உனக்கு செல்லமாக நான்தான்  இருந்தேன்.


பள்ளிகளில் நல்லவை  எல்லாவற்றிற்கும் முன்னுதாரணம் நீயாகத்தான் இருப்பாய். நான் உனக்கு நேரெதிர் . பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி, நான் எந்த தப்பு செய்தாலும் அது உன்னையே சுட்டும். எல்லாவற்றிர்க்கும் நீதான்  நீதிபதி அது பெரும்பாலும் என்னை காப்பதாகவே இருக்கும்.

பத்தாவதில் கணக்கில் எனக்கு  சென்டம் வருமென்று கணித்தது தவறாய் போக, அதை ஏற்றுக்கொள்ள இயலாத நீ சிறுபிள்ளை போல அழுததை நினைத்து  நான் மனங்கசிந்த நாட்கள் ...
திருமணம் முடிந்து கணவன் வீடு செல்கையில் துணைக்கு யாரை அனுப்பலாம் என்று பேசுகையில், இடைபுகுந்த நீ தம்பியை அனுப்புங்கள் அவன் பார்த்து கொள்வான் என்று எனக்கே இல்லாத ஆளுமையை,               தன்னம்பிக்கையை நீ ஊட்டிய நாள் ...

சென்னையில் இருந்து கொண்டு வாரம் ஒருமுறைகூட உங்களால் வந்து போக முடியாதோ என்று ஆதங்கப்பட்ட நாள்... நீ கர்ப்பம் தரித்த காலத்தில் வந்த டைபாயிடும், உன்னை அழைத்து செல்ல அம்மா அப்பா வந்த போதும் நீயும் வாயேண்டா  என்று உன் கண்கள் உரைத்ததை  உணர்ந்து செங்கல்பட்டு  ரயில் நிலையத்தில் நீ ஊருக்கு செல்லும் நாளில் வந்ததும், நானும் உன்னுடன்  ஊருக்குதான் வருகிறேன் என்று நீ  அறிந்தவுடன் உன் விழிகளில் கண்ணீர்  துளிர்த்த நாட்களும் .....   

ஸ்லேட்டு குச்சி முதல் பாரின் சாக்லேட் வரை உனக்கான  பங்கை எனக்கு  விட்டு தந்திருக்கிறாய் . ஆனால்  நான் மட்டும் நமது அம்மாவின் பாசத்தில் உனக்குரிய பங்கை விட்டு தரவே இல்லை .  அது எல்லாம் எனக்கு மட்டுமே வேண்டும் என்று  சுயநலமாக நடந்து கொண்ட பின்னும் , என்றும் மாறா  அதே புன்னகையுடன் நீ சிரித்த நாட்கள், நீ எல்லாமுமானவள் என்பதை எனக்கு உணர்த்திய நாட்கள் !!!

அக்காக்கள் இன்னொரு அம்மாக்கள் !!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன்!!!





27 comments:

  1. really fantastic . it makes me cry.

    ReplyDelete
  2. பத்தாம் வகுப்பில் செண்டம் வரும் என்று ஏமாந்து போனது????????

    இம்புட்டு அப்பாவியாக இருந்திருக்காங்க உங்க அக்கா.

    ReplyDelete
    Replies
    1. இல்லை யாஸிர் நீ வேணும்னா அந்த கணக்கு வாத்தியாரைக் கேளேன்....(அவர் இன்னமும் என்னை தெடிக்கிட்டு இருக்கிறதா கேள்வி!!! ஆமா நல்லா படிக்கிற பையன் செண்டம் போடலன்னா!!!!!!!)

      Delete

  3. உண்மை தான் நண்பரே..
    அருமையான பதிவு..
    வாழ்த்துக்கள்.
    http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.... தொடரட்டும் வருகை...

      Delete
  4. உருகி உருகி எழுதியிருக்கிறீர்கள் உங்கள் அக்கா பற்றி ...உங்கள் அக்கா நிஜத்தில் கொடுத்து வைத்தவர் ,இத்தனை அன்பான தம்பியை பெற ...

    ReplyDelete
  5. நானும் கொடுத்து வைத்தவன் தான் இப்படிப்பட்ட அக்கா கிடைக்க!!!
    நன்றி சகோ. வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும். தொடரட்டும் வருகை..

    ReplyDelete
  6. ரொம்ப அருமையா பாசத்தை பகிர்ந்து இருக்கீங்க...நமக்கு அந்த கொடுப்பினை இல்லை..

    ReplyDelete
  7. அக்காவுக்கும் தம்பிக்கும் இடையேயான பாசப் பிணைப்பை இவ்வளவு அழகாகக் கூட சொல்ல முடியுமா......?
    அம்புட்டு அழகு ...........

    ReplyDelete
  8. Super ! Giving values to sister !!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,மறுமொழியிட்டமைக்கும் நன்றி நண்பரே...

      Delete
  9. Very Nice, I like your way of writing. appreciate...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,மறுமொழியிட்டமைக்கும் நன்றி நண்பரே தொடரட்டும் வருகை...

      Delete
  10. வாவ். ரொம்ப அருமை. மனித நேயம், பாசம் இதெல்லாம் கண்டிப்பாக கெட்டுப்போகவில்லை. நம் மனங்களில் துளிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. சின்னதொரு தூண்டுகோல்தான் தேவை.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,மறுமொழியிட்டமைக்கும் நன்றி ..

      Delete
  11. உங்களுக்கும் உங்கள் அக்காவிற்குமான பாசப் பிணைப்பை வெகு இயல்பாகச் ஹோல்லி இருக்கிறீர்கள். அக்காக்கள் இன்னொரு அம்மாக்கள்- நிஜம்!
    வலைசரத்தில் உங்களது இந்த பதிவு அடையாளம் காட்டப் பட்டிருக்கிறது.
    நானும் என் அக்காவைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
    இணைப்பு:http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/11/blog-post_9.html

    http://ranjaninarayanan.wordpress.com
    http://pullikkolam.wordpress.com
    http://thiruvarangaththilirunthu.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்தேன்.. அருமை. வருகைக்கு நன்றி.

      Delete
  12. வெகு இயல்பாகச் சொல்லி இருக்கிறீர்கள் என்று இருக்க வேண்டும். பிழைக்கு மன்னிக்கவும்!

    ReplyDelete
  13. I wish, I have a elder sister. It is simply great

    ReplyDelete
    Replies
    1. மறுமொழியிட்டமைக்கு நன்றி நண்பரே..

      Delete
  14. அன்பின் ராபர்ட்

    அருமையான பதிவு - அக்கா தம்பி பாசம் பொதுவாக சாதாரணமாக, சண்டைகளுடன் தான் இருக்கும். அக்கா இன்னொரு அம்மா என பாசத்துடன் நினைக்க வைக்கும் இந்த அக்கா தம்பி உறவு சிலிர்க்க வைக்கிறது = படித்து மகிழ்ந்தேன் - நட்சத்திரப் பதிவரானதற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா ...

      Delete
  15. எனக்கு தம்பியா வந்துடேன் ராபர்ட். என்ன, அந்த அக்கா போல பாசம் காட்ட மாட்டேன். சண்டை போட்டு முடி இழுத்து, அடிச்சுன்னு ரகளை பண்ணுவேன். அன்புக்கு அந்த அக்கா! அடாவடிதனத்துக்கு நான்னு பிரிச்சுக்கலாமா?!

    ReplyDelete
    Replies
    1. பாசத்துலேயே இது ஒருவித பயங்கரமான பாசமா இருக்கே அக்கா ... இது மாதிரி ஒரு நெகிழ்வான மறுமொழிக்கு நன்றிக்கா ..

      Delete