கல்லூரி நாட்களுக்கு அப்புறமா எத்தனையோ டூர் வடிவேலு ரேஞ்சுக்கு ப்ளான் பண்ணி, ஆபரேஷன் "டி"ன்னு பேரெல்லாம் வச்சி, கடைசியா பவர் ஸ்டார் படம் மாதிரி ப்ளாப் ஆகிடும்.
போன ரம்ஜான் லீவுக்கு எல்லாரும் சலாலா போகலாம்னு ஒருமனதா முடிவு பண்ணி ரெண்டு கார்ல, மூணு ட்ரைவரோட, நாலு நாள் பயணமா, அஞ்சு பேரு ஒரு காருக்குன்னு மொத்தமா பத்து பேர் ஒரு சுபயோக சுபதினத்தில் கிளம்பிட்டோம்.
போன ரம்ஜான் லீவுக்கு எல்லாரும் சலாலா போகலாம்னு ஒருமனதா முடிவு பண்ணி ரெண்டு கார்ல, மூணு ட்ரைவரோட, நாலு நாள் பயணமா, அஞ்சு பேரு ஒரு காருக்குன்னு மொத்தமா பத்து பேர் ஒரு சுபயோக சுபதினத்தில் கிளம்பிட்டோம்.
கொஞ்சம் ஓமன் கரன்சி கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு எக்சேஞ்சுக்கு போயி ஒரு 500 ஓமன் ரியால்(நம்ம ரூபாய் 70,000) மாத்திக்கிட்டு இருக்கும் போது "காறித் துப்பினா காக்காசு பெறமாட்டான்னு" சொலவடைக்கு மிகப்பொருத்தமான சுடிதார் போட்ட பாகிஸ்தானி ஒருத்தன், அவனை சுற்றி அவனுக்கே உண்டான பாதுகாப்பு வளையத்துடன்(!!!) அவனும் ஓமன் ரியால் மாற்றிக்கொண்டிருந்தான். அவன் மாற்றியது எவ்வளவு தெரியுமா மக்களே ? 6000 ஓமன் ரியால்!!!. நம்மூரு மதிப்புக்கு கிட்டத்தட்ட 9 லட்சம் . என்னோட வாயில போன ஈயை துப்பிட்டு, என்னோட சில்லறைய வாங்கிகிட்டு நின்ன இடம் தெரியாம கிளம்பி வந்துட்டேன்.
கூட வர்ற யாரும் முன்னபின்ன அங்க போனதில்லை. நம்ம கூகுளாண்டவர் துணையோட
ரூட் மேப்பை , லேண்ட்மார்க் போட்டோவோட ஸ்பைரல் பைண்டிங் போட்டு ரெடி
பண்ணிட்டாரு நண்பர் ஒருத்தர். இந்த பெர்பக்க்ஷனை வேலையில காட்டி
இருந்தார்ன்னு வைங்க, "வெரிகுட்"ன்னுருப்பான் வெள்ளைக்காரன். ஏன்னா அவரு
பாஸ் ஒரு வெள்ளைக்காரன் !!!! ஹிஹிஹி ...
1.அபுதாபி(abudhabi ) to அல் அய்ன் பார்டர் கேட் (Al Ain barder )-150 km
2.அல் அய்ன் (Al Ain) to இப்ரி(Ibri ) -125 km
3. இப்ரி(Ibri) டு ரோடு 29 -31 சந்திப்பு -213 km
4.ரோடு 29 -31 சந்திப்பு டு ஹைமா(haimah)-229 km
5. ஹைமா(Haimah) டு முஸ்கின் (Mushkin)-223 km
6. முஸ்கின்(Mushkin) டு தும்ரைத் (Thumrait)-188 km
7. தும்ரைத்(Thumrait) டு சலலாஹ்(Salalah) -82 km
ரம்ஜான் மாசம் வேறயா, வழியில சாப்பிட ஏதும்
கிடைக்காதுங்கிறதால வடிவேலு சொல்றமாதிரி "எவ்வளவு முடியுமோ அவ்வளவு "
ஸ்நாக்ஸும், பழங்களும் வாங்கி வண்டிய நிரப்பியாச்சு.
போற யாருக்கும் வழியும் தெரியாது, அரபியும் தெரியாது. சமந்தா மேல பாரத்த போட்டுட்டு விட்றா சம்முவம் போவட்டும்ன்னு கிளம்பிட்டோம்.
எங்களுக்கு முதல் சோதனை அல் அய்ன் பார்டர் கேட்டுல ஆரம்பிச்சது விசா வடிவுல...
எங்களுக்கு முதல் சோதனை அல் அய்ன் பார்டர் கேட்டுல ஆரம்பிச்சது விசா வடிவுல...
இன்னும் போவோம் ....
வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!
வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!