"சங்கறுப்பதெங்கள் குலம் " என்று பெருமையாக பாடப்பட்ட பரதவரின் சங்கு தான் இன்று இனவெறி பிடித்த சிங்கள நாய்களால் அறுக்கப்படுகின்றன.
போராட்டமே வாழ்க்கையாகிப் போன நம் மீனவர்களுக்கு, கடலோரப் பாதுகாப்பு என்ற பெயரில் சிங்கள கடலோர காவற்படையால் அனுதினமும் சித்திரவதைக்கோ, உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டோதான் இந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள் . தினமும் மீன்பிடி வலைகள் அறுபட்டோ, படகுகள் சேதப்படுதப்பட்டோ, உடமைகள் இழக்கப்பட்டோ சமயங்களில் உயிர் இழக்கப்பட்டோதான் மீனவர்களின் பிழைப்பு நடைபெறுகிறது. அதுவும் தமிழன் ரத்தத்தை குடிப்பதில் சிங்கள தோட்டாக்களுக்கு ஒரு அலாதி பிரியம்.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்"
"சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்"
என்ற முண்டாசுக்கவியின் கனவு நம் தமிழனின் சவங்களின் மேல்தான் அமையும் போலிருக்கிறது.
பிழைப்பு சம்மந்தமாக ஒரு ஒப்பீடு செய்து பாருங்கள் நமக்கும் அவர்களுக்கும் உள்ள மலையளவு வித்தியாசம் புரியும்.
பிழைப்பு சம்மந்தமாக ஒரு ஒப்பீடு செய்து பாருங்கள் நமக்கும் அவர்களுக்கும் உள்ள மலையளவு வித்தியாசம் புரியும்.
- அனுதினமும் உருமாறும் குணாதிசயங்களை கொண்டது இல்லை நமது பிழைப்புக்கான தளம்.
- நமது மனதைரியமும், வாழ்வாதரத்திற்கான அடிப்படையும் தினமும் சோதிக்கப்படுவது இல்லை.
- உழைப்பின் அளவுகோலை தவிர்த்துவிட்டு, நமது அதிர்ஷ்டத்தை நினைத்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை .
- எல்லாவற்றிற்கும் மேலாக நாம் துப்பாக்கி முனையிலோ அல்லது எப்போது சுடப்படுவோம் என்று தெரியாமலோ வேலை பார்ப்பது இல்லை.
வெறுங்கையுடன் உடலும் மனமும் வெறுத்து , உயிர் மீண்டு, கரை திரும்புவது என்பது எவ்வளவு கொடுமையான நிகழ்வு. இதே போன்ற நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்ந்தன என்ற நிலை மாறி அனுதினமும் அவர்களை சாகடிப்பது போன்றதொரு நிலை வருவதற்கு மிக முக்கியமான காரணம் நமது அரசாங்கமும் அதன் மெத்தன போக்கும்தான். இதில் கட்சி பாகுபாடு எல்லாம் கிடையாது. எத்தனை பேரை சிறை பிடித்து சென்றாலும் அல்லது சுட்டு கொன்றாலும் நமது அரசாங்கத்தின் அதிகபட்ச செயலாக்கம் நமது நடுவண் அரசுக்கு ஒரு கடிதம் எழுதுவது, அல்லது காதலியுடன் உரையாடுவது போல தொலைபேசியில் கதைப்பது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நம்மளை இப்படி ஏமாற்றிக்கொண்டு இருக்கப்போகிறார்களோ தெரியவில்லை? இதை எல்லாம் கேட்கிற நமக்கே இவ்வளவு வேகம் வருகிறதென்றால் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு ஆற்றாமையினாலும்,இயலாமையால் வருகிற கோபம் எப்படி இருக்கும்? அந்த உணர்ச்சிகள் எங்கனம் வெளிப்படும்?
இதெல்லாம் நமக்கு தொலைக்கட்சிகளிலோ அல்லது செய்தித்தாள்களிலோ வருகிற ஒரு செய்தி.இதில் நாமா பாதிக்கப்படுகிறோம் ? எங்கோ ஒரு மூலையில் அழுகுரல் கேட்கும் அதுவும் சவலை பிள்ளையின் அழுகுரல் போல . இதற்கெல்லாமா நாம் கவலைப்படுவது!!! நாம் கவலைப்படுவதற்கு எத்தனையோ விஷயங்கள் ,
குஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார் ? நித்தியானந்தாவின் சிஷ்யையா கவுசல்யா? மகத் எனக்கு தம்பி மாதிரி டாப்சி பேட்டி !!!
அடுத்தடுத்து நம்மளை சந்தோஷப்படுத்த நித்தியானந்தா சி.டி யோ அல்லது ஒரு நடிகையின் ஆபாச சி.டி யோ வந்து சேரும். அந்த சி.டி உண்மையா பொய்யா? என்று நீயா? நானா ?அளவுக்கு விவாதம் நடைபெறும்... ஏன்னா நம்மள யாரும் ஏமாத்திடக்கூடது இல்ல!!!.
இவை எல்லாமே நான்கு நாட்களுக்குத்தான்.அதற்கப்புறம் அம்மணமாய் சி.டி யில் இருந்தவன் வந்து அருள்வாக்கு சொல்வான் .அதற்கும் கூட்டம் கூடும் ஏனென்றால் மறதிதான் நமது தேசிய சொத்தாயிற்றே !!!.
"கடாரம் , ஸ்ரீ விஜயமும் கொண்டு" கீழ்த்திசை கடல் முழுவதும் கோலோச்சிய பண்டைய தமிழனின் வீரமும், விவேகமும் இன்று இத்தாலி நாட்டுக்காரியின் கண்ணசைவுக்கு காத்து இருக்கின்றன.
நமது மீனவர்களுக்கு தொழில் ரீதியான வசதிகளை அதிகப் படுத்தி, மாநில அரசின் மூலம் அதிகப்படியான அழுத்தத்தை நடுவண் அரசிற்கு கொடுத்து, "சீக்கியனின் மயிரை விட தமிழ் மீனவனின் உயிர் மலிவானதல்ல" என்ற நிலையை உருவாக்காவிட்டால் இத்துயரங்களுக்கு விடிவு கிடையாது.
தமிழ் மீனவரின் துயரை தீர்க்காமல், நாம் சாப்பிடும் மீன்கள் எல்லாம் கறை படிந்த மீன்கள் .. ஆம் நம் "தமிழ் மீனவர்களின் ரத்தக்கறை படிந்த மீன்கள்".!!!
வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!