எல்லாரையும்
போலவே நடப்பு அரசியலை வெறுத்த போதுதான் தமிழகத்தின் விடிவெள்ளியாக, விடிசனியாக…..
அவர் அவதரித்தார். சரிதான் நல்லதொரு மாற்றம், இனிமே எல்லாம் ம்ம்ம் ….. நல்லதே
நடக்கும் என்றிருந்த போது நம்ம நண்பன் ஒருவன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அந்த
கட்சியில சேர்ந்து ஒரு பொறுப்புல வந்துட்டான்.
அதுக்கு
அப்புறம் அந்த நாசமா போன ப்ளஃக்ஸ் கலாச்சாரத்துலயும் சேர்ந்து ஊரையும், தமிழையும் கதிகலங்க
வச்சிகிட்டு இருந்தான்.
இவன் இருந்த
வேகத்த பார்த்துட்டு கட்சியில உள்ளாட்சி தேர்தல்ல இவனுக்கும், இவனோட இன்னொரு நண்பனுக்கும்
சீட் குடுத்தாங்க…. இவரு நல்லவரு… அவரு நல்லவரோ நல்லவர்.
ரொம்ப ஆர்வமா
எல்லாரும் உழைச்சாங்க… நம்ம நண்பனை எதிர்த்து நின்னவரு ஒரு பெரிய கட்சிய சேர்ந்தவர்,பண
முதலை, இருந்தாலும் போட்டு பார்ப்போம் அப்படின்னுதான் தேர்தல்ல நின்னான். தேர்தலும் முடிஞ்சு முடிவுகளும் வந்துச்சு,
கவுண்டிங் முடிஞ்சு கொஞ்சம் சோகமா வந்தவனைப் பார்த்து என்னாச்சுடா என்றதற்க்கு 4
விரலைக் காட்டினான். பயபுள்ள 4 ஓட்டு வித்தியாசத்துல தோத்து போய்ட்டான்.எங்க
எல்லாருக்குமே கொஞ்சம் கஷ்டமாயிருச்சி.
கொஞ்ச நேரம்
அமைதியா இருந்துட்டு, அந்த இன்னொரு நண்பனுக்கு என்ன ஆச்சுடா என்றதற்க்கு அதுக்கும் 4 விரல்லயே காட்டினான். என்ன அவனும்
4 ஓட்டு வித்தியாசத்துல தோத்து போய்ட்டானா
!!!! என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு, கேட்டவனை ஏறிட்டு பார்த்துட்டு நண்பன்
அமைதியா சொன்னான்………
இல்லடா
மச்சான், அவன் வாங்கினதே 4 ஓட்டுதான் !!!!!!!!!!!!!!!!!!!!
(ஏன்னா
அவருக்கு அவ்வளோ நல்ல பேரு!!)
இதுல ஹைலைட்டான
விஷயமே, கடுப்பான நண்பன் முடிவு வந்த மறுநாள், நன்றி சொல்றேன்னு சொல்லிட்டு, மைக்
செட்டும் ஒரு ஆட்டோவும், வாடகைக்கு எடுத்துட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் திருப்பி
திருப்பி போட்டு அந்த ஏரியாக்காரங்கள வெறுப்பேற்றினான். அது என்ன பாட்டுன்னா…..
“ நாலு பேருக்கு
நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி
நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி
தாயில்லாத
அனாதைக்கெல்லாம் தோள்குடுத்து தூக்கி செல்லும்
அந்த நாலு பேருக்கு நன்றி..”
வாழ்க வளமுடன்……… தமிழ் தந்த
புகழுடன்………………
No comments:
Post a Comment