இன்னைக்கு
மழை வராதா? இல்லாட்டி எனக்கு காய்ச்சல் அடிக்காதா? பள்ளிகூடம் லீவு கிடைக்காதா!!
அப்படி நினைச்சுகிட்டு பள்ளிகூடம் போன நாட்கள் தான் நம்மளோட வரலாற்றில் அதிகம்….
அதிலும் அந்த கணக்கு பாடத்த நினைச்சாலே கடுப்பா வரும்….. ஒரு மாட்ட செவ்வக வடிவில்
உள்ள வயலின் மையத்தில் 10மீ நீளமுள்ள கயிற்றில் கட்டி இருப்பாங்க, மாடு தின்ன
புல்லின் பரப்பளவு என்ன? அப்படின்னு கேட்டு இருப்பாங்க, அந்த கேள்விய படிச்சதுமே நம்ம மூஞ்சியில
ப்யூஸ் போய்ரும்.. எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியுதோன்னு நாம ஆச்சரியப்படுற
அளவுக்கு கணக்கு இருக்கும்…
அதுலயும்
ரொம்ப ஈசியா இருக்க கணக்க டீச்சர் போட்டுட்டு, கஷ்டமா இருக்குற கணக்க நம்ம தலையில
கட்டிருவாங்க…… அதையும் அப்பவே போட்டு ஆன்ஸர் சொல்ல சொல்லுவாங்க… இது நடக்குற
காரியமா நமக்கு??!!!!!!! அப்டியும் ரொம்ப சீரியஸா கணக்கு போடுற மாதிரி ரூட்ட
குடுக்குறது ஆனா இது எப்படிதான் அந்த டீச்சருக்கு தெரியும்ன்னு தெரியாது, அவ்ளோ
பேரு இருக்குற க்ளாசுல என்னய கூப்பிட்டு ஆன்ஸர் சொல்ல சொல்லுவாங்க…. நாம அப்பதான்
Given Data அப்பிடின்னு போட்டு,
அண்டர்லைன் எல்லாம் பண்ணி ரொம்ப அழகா எழுத முயற்சி பண்ணிட்டு இருப்போம். இவ்வளவு நேரம் ஆச்சு என்ன பண்றே!!! அந்த நோட்ட எடு அப்பிடின்னு
சொல்லி முடிக்கிறதுக்குள்ள என் நோட்ட தூக்கி குடுத்துருவாங்க சில எட்டப்பர்கள். அப்புறம்
என்ன ஒரே அடிதடி தான்.
ஒருதடவை
ரொம்ப புத்திசாலித்தனமா புக்குல கடைசியா இருக்குற ஆன்சர பார்த்து சொல்லிட்டேன்.
நம்ம நேரத்துக்கு அது தவறான விடையா போக, டீச்சர் என் நோட்ட வாங்கி பார்க்க,
அப்புறம் என்ன ஒரே தீபாவளிதான்..
அந்த
அடிதடி கூடஒ.கே, நான் தாங்கிருவேன், ஆனா அதுக்கு அப்புறம் ஒரு பத்து நிமிஷத்துக்கு
பண்ணுவாங்க பாருங்க அட்வைஸ்… அதுலயும் உங்க அக்கா ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர்றா நீ ஏன்டா
இப்படி இருக்குற? அவ படிக்குற நேரத்துல நீ என்ன பண்ற? அப்பப்பா கஷ்டகாலம்டா சாமி...
இதுல ஹைலைட்டா வார கடைசியில சர்ச்சுல பார்த்துட்டு அம்மா கிட்ட இவன் வர வர ஒழுங்கா
படிக்கிறதே இல்ல ( நாம எப்பொ ஒழுங்காபடிச்சோம்!!!!!!!) அப்படின்னு வத்தி வைக்கிறது……
அப்டின்னு நெறய பண்ணி நம்மளோட வயித்தெரிச்சலை
ரொம்ப கொட்டிக்கிட்டாங்க…
சத்தியமா
இன்னைக்கு இந்த டீச்சர் குறைந்த பட்சம் சர்ச்சுக்காவது வராமல் காப்பாத்து அப்படி
எல்லாம் வேண்டி இருக்கேன்னா பார்த்துக்கங்க………..
அப்படி
கும்பிட்ட எல்லா சாமிகளோட ஆசிர்வாதத்தால் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கும்
போயாச்சு, இதுவரைக்கும் கணக்குல நான் படிச்ச வெக்டர், ð2X/ ð2Y,
ஆய்லர்’ஸ் தியரி,வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம் இது எல்லாம் என்னோட ப்ராக்டிக்கல் லைப்ல வரவே இல்ல…. நானும்
பார்க்கிறேன் இதை எல்லாம் எப்பதான் யூஸ் பண்ண போறேன்னு………….!!!!!!!!!!!
![]() |
வாழ்க வளமுடன்……… தமிழ் தந்த
புகழுடன்………………