எல்லோருக்கும் காலேஜ் லைப் ரொம்ப சுவாரஸ்யமா தான் இருக்கும். என்னுடன் கூட படித்த நண்பர்களும் என்கூடவே அதே காலேஜ்ல சேர்ந்ததால நம்மளுக்கு ரொம்பவே விசேஷம்.....முதல் வருடம் ஹாஸ்டல் வாழ்க்கை ரொம்ப அமர்க்களமாக இருந்தது. ராகிங் தொல்லைக்காக பர்ஸ்ட் இயருக்கு தனி ஹாஸ்டல், தனி மெஸ் , காலேஜ் போகும் போது பாதுகாப்புக்கு ரெண்டு மூணு வார்டன் எல்லாம் உண்டு .... ஆனா சீனியர்ஸ் அதையும் தாண்டி வந்து அடி பொளந்துட்டு போயிருவாங்க ......
லேப் ல அவுட்புட் வரலன்னு யாராவது லேட்டா வந்தான்... தொலைஞ்சான் ..அங்க வராத அவுட்புட் எல்லாம் இங்க வந்திரும்......எல்லா பிரச்னையும் ரூமுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே மறந்து போயிரும் .. அவ்வளவு ஜாலியா இருக்கும் .... எங்களோட பொழுது போக்குல ஒன்னு என்னன்னா ரூமுக்கு வர்ற பசங்ககிட்ட பிறந்த தேதி கேட்டு கலாய்க்கிறது..எங்க ரூம்மேட்ட பார்க்க வர்ற பசங்கள எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வச்சிட்டு சபையில விட்டுடுவான். கொஞ்ச நேரம் அவன்கிட்ட இயல்பா பேசிக்கிட்டு இருந்துட்டு .. எங்கள்ள ஒருத்தன் வயசு என்ன மாப்ள அப்படிம்பான், நம்மாளும் பதினெட்டு , இல்ல பத்தொம்பது அப்படின்னு சொல்ல ..எல்லாரும் ரொம்ப ஷாக்காகி என்ன சொல்ற என்ன மாப்ள இப்படி சொல்ற என் வயசு எட்டு தான் ஆகுது, மாமா உனக்கு எத்தனைன்னு பிரெண்ட பார்த்து கேட்க அவங்களும் எட்டர, ஒன்பது இந்த ரேஞ்சுக்கு சொல்ல நம்மாளு லைட்டா டரியல் ஆவான் ....
உடனே நீ எந்த வருஷம் பொறந்த .... அப்படின்னு கேட்க நம்மாளும் அவன் பொறந்த வருஷத்த எண்பது,எண்பத்தொன்னு ரேஞ்சுக்கு சொல்ல ..நாங்க ரொம்ப கேஷுவலா ஒ... தொண்ணூறு , தொண்ணுத்தி ஒன்ன தான் மாத்தி சொல்லிட்டியான்னு கேட்க அவன் கொஞ்சம் யோசனையா இல்லையே மாப்ள நான் எண்பதுலதான் பொறந்தேன்னு சொல்ல .. அப்படின்னா முதியோர் கல்விக்கு போக வேண்டியதுதான எதுக்கு இன்ஜினியரிங் காலேஜ் வந்த .. அப்படின்னு கேட்டு அவன ஊறுகாயா ஆக்கி நம்ம பொழுத போக்க வேண்டியது ...
அப்படி ஊறுகாயா ஆனவங்கள்ள பல பேரு அவனோட ரூமுக்கு போயி மார்க் ஷீட்ட பார்த்து அவனோட சந்தேகத்த நிவர்த்தி பண்ணிருக்காங்கன்னா பாத்துக்கோங்க ....
அப்படி ஊறுகாயா ஆனவங்கள்ள பல பேரு அவனோட ரூமுக்கு போயி மார்க் ஷீட்ட பார்த்து அவனோட சந்தேகத்த நிவர்த்தி பண்ணிருக்காங்கன்னா பாத்துக்கோங்க ....
இதுல ஹைலைட்டு என்னான்னா எங்க ரூம்ல இருந்துகிட்டு அவன் காரிடார்ல போற பசங்கள பார்த்து மச்சான் உன் வயசு என்னன்னு அவன் கேட்க அவங்களும் எட்டர, ஒன்பது அப்படின்னு சொல்ல நம்மாளு முகத்துல ஈயாடாது .....
அவங்க ஏன் அப்படி சொல்றாங்கன்னா ???
ஒருகாலத்துல அவங்களும் நமக்கு ஊறுகாயா ஆனவங்கதான் !!!!!!!!!!!!!!!!!
வாழ்க வளமுடன்... தமிழ் தந்த புகழுடன் ...
அவங்க ஏன் அப்படி சொல்றாங்கன்னா ???
ஒருகாலத்துல அவங்களும் நமக்கு ஊறுகாயா ஆனவங்கதான் !!!!!!!!!!!!!!!!!
வாழ்க வளமுடன்... தமிழ் தந்த புகழுடன் ...
No comments:
Post a Comment