Sunday, December 1, 2013

குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்சது!!!

சாயந்திர  டீயை குடிச்சிகிட்டே வழக்கம் போல ஒவ்வொரு  டிவி சேனலா தாவிக்கிட்டு இருக்கும் போதுதான் அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க நேரிட்டது.

அது கேப்டன் டிவி நியுஸ். சாதாரண நியுஸ் கிடையாது கேப்டன் டெல்லில தேர்தல் பிரச்சாரம் பண்ணுற நியுஸ். படிக்கும் போதே லெப்ட் லெக்கை  சுவத்துல வச்சி, ரைட் லெக்கால நெஞ்சுல மிதிச்ச மாதிரி இருக்குல்ல அப்போ அதை பார்த்த என்னோட நிலைமையை யோசிச்சிக்கிட்டே கீழ படிங்க,

எத்தனை ரவுண்டு போச்சோ தெரியல,கேப்டன் பொளந்து கட்டுறாரு!!!
துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ?

துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ? 

அப்புடின்னு  அவருக்கு தெரிஞ்ச இங்கிலிஷ்ல ஒரு நாப்பது தடவை கேக்குறாரு. என்னடா இதைப் போயி இங்க்லீஷ் ன்னு சொல்றானேன்னு  நீங்க நெனைச்சிங்கன்னா, அப்புடியே கீழ இருக்குற இந்த வீடியோவை பாருங்க ,


              

டெல்லியில் அலைகடலென திரண்டு இருக்கும் மக்கள் வெள்ளத்தில் கேப்டன் அடிக்கடி இங்கிலீஷ் ஹிந்தின்னு பேசி  டங் சிலிப் ஆகி   நம்மள  தெறிக்க விட்டாரு. டரியலாகி அப்புடியே சேனல் சேனலா  தாவி மேல போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு கீழ எறங்கி வரும் போது பார்த்தா, அட நம்ம பிரேமலதா அண்ணி கேண்டிடேட் ஜெயிச்சா என்ன பண்ணுவாங்கன்னு  சொல்லிகிட்டு இருந்தாங்க , அது என்னன்னா 

ரோடு போடுவாங்களாம் ,
சாதி சான்றிதழ் வாங்கி தருவாங்களாம் 
ரேசன் கார்டு வாங்கி தருவாங்களாம்.
பிரதமர்கிட்ட பேசுவாங்களாம்.

இத்தனை "களாம்"களுக்கு மத்தியில் ஒரு ஆள் கல்யாண வீட்டு வாசல்ல வச்ச பொம்மை மாதிரி வேன்ல  நின்னு கும்புட்டுக்கிட்டே   சுத்தி, சுத்தி வந்தாரு அவர்தான் நம்ம கேண்டிடேட்டாம்.
ஸ்ஸ்ப்ப்பா கண்ணைக் கட்டிடுச்சு போங்க.  

கேப்டன் நம்மளுக்கு தமிழே தகராறு, எழவு வீட்டுல போய் ஆழ்ந்த நன்றி சொல்ற பார்ட்டிங்க, நம்மளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? ரெண்டு ரவுண்ட போட்டோமா, நாலு தீவிரவாதிகளைப் புடிச்சோமான்னு, கண்ணு செவக்க நாக்கை துருத்தி எங்கள மாதிரி நிறையப் பேரை என்டர்டெயின் பண்ணுனோமான்னு இல்லாம சின்னப்புள்ள தனமா என்ன என்னவோ செய்றீங்க ??

இதெல்லாம் பார்த்த பிறகு எனக்கு ஒன்னே ஒண்ணுதான் தோணிச்சு கேப்டன் அதுதான் , அதுதான் 
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அதைத்தான் இந்த பதிவுக்கு  தலைப்பா வச்சு தொலைஞ்சிருக்கேன் கேப்டன் :-)


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

13 comments:

 1. தில்லித் தமிழர்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாய் எதோ உள்ளூர் கட்சிகளோடு சேர்ந்து தமக்கான இடத்தையும், உரிமைகளையும் பெறத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே மதராசிகள் எங்கு போனாலும் ராசியில்லாத போல ஒதுக்கப்பட்டும் கிண்டலடிக்கப்பட்டும் கிடக்கின்றோம். இந்த லட்சணத்தில் இந்தாள் வேற தேர்தலில் குதிக்கிறேன் விட்டத்தில் பாயுறேன் என உள்ளதையும் கெடுக்கப் பார்க்கிறாப்போல. யாரோ சொன்னாங்களாம் என்ன கட்சியில் மட்டும் தேசியம் இருக்கு என, அதான் பொங்கி எழுந்து தில்லியில் போட்டியிட்டு மண் கவ்வி, தமிழ் கட்சி மண் கவ்வியதே என வரலாறு படைக்க கிளம்பிட்டாருங்கோ. போதிய ஆதரவில்லாததால் ஊருக்கு வந்திட்டாரு என செய்தியில் வாசித்தேன்..!

  ReplyDelete
  Replies
  1. இந்த தமிழன் எங்க போனாலும் அங்க பிரச்சினைதான் என்று பொதுவான கருத்து மற்ற இனத்தவரிடம் உண்டு. இதை சொன்ன ஒருவரிடம் கோபமா ரொம்ப நேரம் விவாதம் புரிந்ததுண்டு.
   ஆனா இந்த கேப்டன் இங்க ஜெயிச்ச தொகுதிகள்ல எல்லாத்தையும் செஞ்சு கிழிச்சிட்ட மாதிரி அங்க போய் போட்டியிடுவதை நினைச்சா சிரிப்புதான் வருது. போதிய ஆதரவாவது மண்ணாவது , ஒரு தொகுதிக்கு நிக்க ஒரு ஆள் கிடைச்சா போதும்கிற அளவுல தான் இருக்காரு நம்ம புர்ச்சி தலீவர் விசயகாந்த் ....

   Delete
 2. அபட்ப் போகங்கப்ப்ப்ப்ப்ப்ப்பா ...

  கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

  ReplyDelete
  Replies
  1. இதே பீலிங் தாண்ணே எனக்கும் அவரு பேசும் போது தோணிச்சு ....

   Delete
 3. எத்தனை ரவுண்டு போச்சோ தெரியல,
  கேப்டன் பொளந்து கட்டுறாரு!!!........என்ன ரவுண்டு...? ஒ..அதுவா
  டெல்லியில ரொம்ப குளிரு அதுதான்

  ReplyDelete
  Replies
  1. கொதிக்கிற வெயிலுக்கே ஸ்வெட்டர் போடுறவராச்சே நம்ம கேப்டன் டெல்லில விட்டுடுவாரா என்ன ??? வருகைக்கு நன்றி நண்பரே .

   Delete
 4. இவரைப் பற்றிய செய்திகளில் நேரத்டைச் செலவிட வேண்டுமா. சும்மாச் சொல்லக் கூடாது. தமிழ்நாட்டில் இவருக்கு இருக்கும் ஆதரவுபோல் டெல்லியில் கேஜ்ரிவாலுக்குக் கிடைத்து ஆட்சியிலும் அமர்ந்து விட்டாரே. நம் அரசியலில் எதுவும் நடக்கலாம். புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

   Delete
 5. கேப்டன் கொஞ்சம் ஓவரா போட்றுப்பார் அதான் ஸ்லிப்பாயிருச்சி. ஏர்டெல் DTHல கேப்டன் டிவிய டெலிட் பண்ணிட்டாங்க. யாரோ complaint பண்ணிட்டாங்களாம், அசிங்க, அசிங்கமா பேசறாங்கன்னு.

  ReplyDelete
 6. இது எல்லாம் கேப்டனுக்கு கெடைச்ச பெருமை. அப்புடித்தான் அவரு நினைச்சுக்கிட்டு இருப்பார் . வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 7. இனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
  குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
  மலரட்டும் !

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .

   Delete
 8. ஆங்...குருட்டு பூனைக்கு இப்ப ஏக டிமான்ட்...
  உண்மையிலே விட்டத்தில பாஞ்சிடுச்சு...........

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...