Tuesday, July 30, 2013

கொல்லைப்புற கிணற்றடியும் பவள மல்லி மரத்தடியும்..

எத்தனையோ  முறை உன்னைக் கடந்து வந்திருப்பேன் அவசரமாகவோ, இல்லை கண்டும் காணாமலோ. ஆனால்  நான் வெறுமையை உணரும் போதெல்லாம் "தாய் மடி கண்ட சேய்" போல  தஞ்சமடையும் இடம் கொல்லைப்புறத்தில் உள்ள இந்த கிணற்றடியும், அந்த பவள மல்லி மரத்தடியும் தான்.

எப்போதிருந்து ஆரம்பித்தது இந்த சினேகிதமான  நெருக்கம்? பால்யத்தில் விளையாட ஒருவருமின்றி தனித்திருந்த சில பொழுதுகளை வாஞ்சையுடன்   அரவணைத்த போதா? இல்லை அம்மா துணி துவைக்க தண்ணீர் சேந்தி தரும் பொழுதுகளில், கிடைக்கும் இடைவெளியில் ஈரக்   கைகளுடன் அங்கு சிதறிக்கிடக்கும் பவளமல்லி மலர்களை சேகரித்து அதன் வாசனையை ஆழமாய் சுவாசித்து நுரையீரல்களில் நிரப்பிய தருணத்திலா?



அல்லது ,
சற்றே பெரியதாய், உயரமாய் அமைந்த துணி துவைக்கும் கல்லின் மேல் படுத்தவாறே சிதறிக்கிடக்கும் நட்சத்திர கூட்டங்களை ஆச்சர்யமாய் எண்ணிக்கொண்டிருந்த போதா?

அல்லது,
வீட்டில் சண்டையிட்டு கோபித்த இரவுகளின் நீட்சியாய் பசியுடனும், கண்ணீர்க் கரையோடிய கன்னங்களுடனும்  கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்த அந்தப் பொழுதிலா?

அல்லது,
வானம் வெளித்த மழை நாளில், கதிரவன் தன் பொன்மஞ்சள் கதிர்களை கலைந்தோடும் முகில்களுக்கிடையே சிதறடித்துக் கொண்டிருந்த மாலையொன்றில், மழைமுத்தை மடியில் ஏந்தியவாறு பச்சைப் புல்வெளிப் பரப்பில் சிதறிக்கிடந்த  பவளமல்லி மலர்களும், கொல்லைப்புறத்தையே தன் வாசனையால்  நிரப்பி வைத்திருந்த, மொட்டவிழ்ந்த சந்தன முல்லை மலர்களுமாய் காட்சியளித்தபோதா?

சரியாய்த் தெரியவில்லை எனக்கு. இருக்கலாம் இவற்றில் எதாவதொரு பொழுதிலோ அல்லது இவை அனைத்தும் சேர்ந்து என்னை ரசவாதம் செய்த ஒரு கலவையான பொழுதிலோ, என் மனதை முற்றிலுமாக  ஆக்கிரமித்திருக்கலாம், இந்த கொல்லைப்புற கிணற்றடியும் அந்த பவள மல்லி  மரத்தடியும்.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!








16 comments:

  1. எதனையும் ரசிக்கும் உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான ரசனை...

    ReplyDelete
  3. ரசனையான காட்சிப் பகிர்வு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நல்ல ரசனை.

    பவளமல்லியின் வாசனை கிறங்க வைக்கும். மலர்கொட்டிக்கிடப்பதையும் ரசிக்காமல் இருக்கமுடியாது..

    ReplyDelete
  5. இயல்பான நடையில் அருமையான ரசனைப் பதிவு!

    ReplyDelete
    Replies
    1. பெரியவங்க வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றிண்ணே...

      Delete
  6. அனைத்து காரணங்களும் ரசிக்கும் படி உள்ளது...

    பாராட்டுகள், எனக்கும் இப்படியொரு ஏரிக்கரை எங்கள் ஊரில் உள்ளது... அழகான பதிவு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே..

      Delete
  7. அருமையான பதிவு. பள்ளி விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்லும் போது இளம் காலையில் கோவில் லவுட் ஸ்பீக்கரில் பாடல் கேட்டு கொண்டே கிணற்றடியில் பவள மல்லி வாசனையில் அமர்ந்திருந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. சுகமான வாசனையுடன் கூடிய நினைவுகள் தான்...வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  8. மிக அருமையான வர்ணனை. பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ..

      Delete