சாயந்திர டீயை குடிச்சிகிட்டே வழக்கம் போல ஒவ்வொரு டிவி சேனலா தாவிக்கிட்டு இருக்கும் போதுதான் அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க நேரிட்டது.
அது கேப்டன் டிவி நியுஸ். சாதாரண நியுஸ் கிடையாது கேப்டன் டெல்லில தேர்தல் பிரச்சாரம் பண்ணுற நியுஸ். படிக்கும் போதே லெப்ட் லெக்கை சுவத்துல வச்சி, ரைட் லெக்கால நெஞ்சுல மிதிச்ச மாதிரி இருக்குல்ல அப்போ அதை பார்த்த என்னோட நிலைமையை யோசிச்சிக்கிட்டே கீழ படிங்க,
எத்தனை ரவுண்டு போச்சோ தெரியல,கேப்டன் பொளந்து கட்டுறாரு!!!
துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ?
துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ?
அப்புடின்னு அவருக்கு தெரிஞ்ச இங்கிலிஷ்ல ஒரு நாப்பது தடவை கேக்குறாரு. என்னடா இதைப் போயி இங்க்லீஷ் ன்னு சொல்றானேன்னு நீங்க நெனைச்சிங்கன்னா, அப்புடியே கீழ இருக்குற இந்த வீடியோவை பாருங்க ,
டெல்லியில் அலைகடலென திரண்டு இருக்கும் மக்கள் வெள்ளத்தில் கேப்டன் அடிக்கடி இங்கிலீஷ் ஹிந்தின்னு பேசி டங் சிலிப் ஆகி நம்மள தெறிக்க விட்டாரு. டரியலாகி அப்புடியே சேனல் சேனலா தாவி மேல போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு கீழ எறங்கி வரும் போது பார்த்தா, அட நம்ம பிரேமலதா அண்ணி கேண்டிடேட் ஜெயிச்சா என்ன பண்ணுவாங்கன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க , அது என்னன்னா
ரோடு போடுவாங்களாம் ,
சாதி சான்றிதழ் வாங்கி தருவாங்களாம்
ரேசன் கார்டு வாங்கி தருவாங்களாம்.
பிரதமர்கிட்ட பேசுவாங்களாம்.
இத்தனை "களாம்"களுக்கு மத்தியில் ஒரு ஆள் கல்யாண வீட்டு வாசல்ல வச்ச பொம்மை மாதிரி வேன்ல நின்னு கும்புட்டுக்கிட்டே சுத்தி, சுத்தி வந்தாரு அவர்தான் நம்ம கேண்டிடேட்டாம்.
ஸ்ஸ்ப்ப்பா கண்ணைக் கட்டிடுச்சு போங்க.
கேப்டன் நம்மளுக்கு தமிழே தகராறு, எழவு வீட்டுல போய் ஆழ்ந்த நன்றி சொல்ற பார்ட்டிங்க, நம்மளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? ரெண்டு ரவுண்ட போட்டோமா, நாலு தீவிரவாதிகளைப் புடிச்சோமான்னு, கண்ணு செவக்க நாக்கை துருத்தி எங்கள மாதிரி நிறையப் பேரை என்டர்டெயின் பண்ணுனோமான்னு இல்லாம சின்னப்புள்ள தனமா என்ன என்னவோ செய்றீங்க ??
இதெல்லாம் பார்த்த பிறகு எனக்கு ஒன்னே ஒண்ணுதான் தோணிச்சு கேப்டன் அதுதான் , அதுதான்
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அதைத்தான் இந்த பதிவுக்கு தலைப்பா வச்சு தொலைஞ்சிருக்கேன் கேப்டன் :-)
வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!