நெறைய நாள் காலேஜுக்கு வெளியேயும் கொஞ்ச நாள் காலேஜுக்கு உள்ளேயும் படிக்கிறோம்ன்னு சொல்லிட்டு சுத்திகிட்டு இருந்த அந்த நாள்ல, எங்கள கொஞ்சம் தெறிக்க விடுற ஆள் யாருன்னா எங்க காலேஜ் வாட்ச்மேன்கள் ,
#1:நாதன் :
அவரு பேரு நாதன். மெல்லிசா ஊதினா பறக்குற மாதிரி இருப்பார், ஆனா டூட்டில ரொம்ப வெறைப்பா இருப்பாரு. காலையில எட்டரைக்கு மேல மெயின் கேட்டை பூட்டிருவாங்க. அதுக்கு காவலா இந்த ஆளு உட்கார்ந்து லேட்டானதுக்கு காரணம் கேப்பார் . காரணம் கேக்குறது பெருசு இல்ல அதை இங்கிலிஷ்ல கேப்பார். அதான் பிரச்சினையே.
நம்மளுக்கு இங்கிலீஷ் எல்லாம் இன்கமிங் மட்டும்தான் .நோ அவுட் கோயிங். அதுனால அவரு கேக்குற அத்தனை கேள்விக்கும் சளைக்காம டக்கு டக்குன்னு தமிழ்லயே பதில் சொல்லி ரொம்ப சில நாள் மட்டும் உள்ளேயும் பலநாள் வெளியே "அக்கா கடை" இல்லன்னா "மாமா கடை"யில இருந்து எங்க காலேஜை பத்திரமா பார்த்துக்குவோம் .
இப்புடி எங்களப் போன்ற அவுட்ஸ்டேண்டிங் ஸ்டுடண்ட்ஸ கடுப்பேத்துற
"வெள்ளைக்கார நாதன்" எங்க ப்ளாக்ல இருந்த பாத்ரூமுக்கு போக, இதைப் பார்த்த நாங்க, அந்த ரூமை வெளிய பூட்டிட்டோம் . கொஞ்ச நேரம் கழிச்சு அவரு கதவ தட்ட, நாங்க யாருன்னு கேட்க, அவரு மெதுவா "நாதன்" ன்னு சொல்ல நாங்க "நாந்தான்னா" யாருய்யா ? உன் பேர சொல்லுன்னு சொல்லி ரொம்ப நேரம் சத்தெடுத்தோம் .இடைக்கு இடையில அந்த கதவு நாதங்கிய புடிச்சு தொறக்கிற மாதிரி நாங்க பாவ்லா பண்ணுறதும் , அவரும் வேகமா கதவைத் தொறக்க முயற்சி பண்ணுறதுமா ரொம்ப சுவாரஸ்யமா போச்சு எங்களுக்கு.
அப்புறம் போனா போகட்டும்ன்னு அவரு வயசு, காலேஜ்க்கு அவர் பண்ணின சர்வீஸ் எல்லாத்தையும் மனசுல வச்சி கடைசி வரைக்கும் கதவை தொறக்காமலே அப்புடியே விட்டுட்டு போய்ட்டோம்.
அப்புறம் என்ன அவரு டூட்டில இருந்தாருன்னா , நாங்க கேட்டை மட்டும் பார்த்து தொட்டு கும்பிட்டுட்டு,13வரியில உள்ளதை செய்ய ஆரம்பிச்சுடுவோம் .
#2:குரு :
இவர் பேர் குரு, அவரு ஊதினா நாம பறந்திடுற மாதிரி நல்லா ஓங்கு தாங்கா இருப்பார். இவரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுதான்.ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்குற குரு கையில ரெண்டு, மூணு சிகரெட்டை அவர் கையில வச்சு அழுத்துனா போதும் கேட்டு திறந்திடும். உள்ளே போக, வெளியே வர ரெண்டுக்கும் இதுதான் ப்ரொஸீஜர்.
வகுப்பிலிருந்து வெளிநடப்பு செஞ்ச ஒரு மதியம், ரூமுக்கு போகலாமுன்னு வந்தா கேட்டுல நம்ம "குரு". சரி சிகரெட்டு ஏதாவது இருக்கான்னு பார்த்தா யார்கிட்டயும் இல்ல. கீழ கிடந்த ஒருகிங்க்ஸ் சிகரெட்டு பாக்கெட்டுல , அக்கம் பக்கம் கிடந்த ஒட்டு பீடிய பொருக்கி போட்டு கொண்டு போயி குடுத்தோம். சிரிச்சிகிட்டே உள்ள பார்க்காம வேகமா வாங்கி பேன்ட் பாக்கெட்டுல சொருகிக்கிட்டு கதவை தொறந்து விட்டுட்டாரு.
அடுத்த முறை அவரைப் பார்த்த போது, அவர் திட்டிய திட்டெல்லாம் எழுதினால் அது கெட்ட வார்த்தைகளின் அகராதியாக இருந்திருக்கும்.
இப்படியாக ரெண்டு வாட்ச்மேன்களிடமும் பஞ்சாயத்து ஆகிவிட்டதால் நாங்க திருந்தி ,
வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!