Thursday, June 14, 2012

நாலு பேருக்கு நன்றி



எல்லாரையும் போலவே நடப்பு அரசியலை வெறுத்த போதுதான் தமிழகத்தின் விடிவெள்ளியாக, விடிசனியாக….. அவர் அவதரித்தார். சரிதான் நல்லதொரு மாற்றம், இனிமே எல்லாம் ம்ம்ம் ….. நல்லதே நடக்கும் என்றிருந்த போது நம்ம நண்பன் ஒருவன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அந்த கட்சியில சேர்ந்து ஒரு பொறுப்புல வந்துட்டான்.

அதுக்கு அப்புறம் அந்த நாசமா போன ப்ளஃக்ஸ் கலாச்சாரத்துலயும் சேர்ந்து ஊரையும், தமிழையும் கதிகலங்க வச்சிகிட்டு இருந்தான்.       
                                         

இவன் இருந்த வேகத்த பார்த்துட்டு கட்சியில உள்ளாட்சி தேர்தல்ல இவனுக்கும், இவனோட இன்னொரு நண்பனுக்கும் சீட் குடுத்தாங்க…. இவரு நல்லவரு… அவரு நல்லவரோ நல்லவர்.

ரொம்ப ஆர்வமா எல்லாரும் உழைச்சாங்க… நம்ம நண்பனை எதிர்த்து நின்னவரு ஒரு பெரிய கட்சிய சேர்ந்தவர்,பண முதலை, இருந்தாலும் போட்டு பார்ப்போம் அப்படின்னுதான் தேர்தல்ல நின்னான்.  தேர்தலும் முடிஞ்சு முடிவுகளும் வந்துச்சு, கவுண்டிங் முடிஞ்சு கொஞ்சம் சோகமா வந்தவனைப் பார்த்து என்னாச்சுடா என்றதற்க்கு 4 விரலைக் காட்டினான். பயபுள்ள 4 ஓட்டு வித்தியாசத்துல தோத்து போய்ட்டான்.எங்க எல்லாருக்குமே கொஞ்சம் கஷ்டமாயிருச்சி.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு, அந்த இன்னொரு நண்பனுக்கு என்ன ஆச்சுடா என்றதற்க்கு  அதுக்கும் 4 விரல்லயே காட்டினான். என்ன அவனும் 4  ஓட்டு வித்தியாசத்துல தோத்து போய்ட்டானா !!!! என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு, கேட்டவனை ஏறிட்டு பார்த்துட்டு நண்பன் அமைதியா சொன்னான்………

இல்லடா மச்சான், அவன் வாங்கினதே 4 ஓட்டுதான் !!!!!!!!!!!!!!!!!!!!
(ஏன்னா அவருக்கு அவ்வளோ நல்ல பேரு!!)

இதுல ஹைலைட்டான விஷயமே, கடுப்பான நண்பன் முடிவு வந்த மறுநாள், நன்றி சொல்றேன்னு சொல்லிட்டு, மைக் செட்டும் ஒரு ஆட்டோவும், வாடகைக்கு எடுத்துட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் திருப்பி திருப்பி போட்டு அந்த ஏரியாக்காரங்கள வெறுப்பேற்றினான். அது என்ன பாட்டுன்னா…..
                                                      
  “ நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி
   நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி
   தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள்குடுத்து தூக்கி செல்லும்
   அந்த நாலு பேருக்கு நன்றி..”


வாழ்க வளமுடன்……… தமிழ் தந்த புகழுடன்………………

Monday, May 28, 2012

நாங்க அப்பவே அப்படி



பொதுவா ஒரு தெரியாத விஷயத்த பத்தி நாம அவ்வளவா பேசவிரும்ப மாட்டோம்.அப்பிடியே பேசினாலும் கொஞ்சம் பட்டும் படாமலும் பேசுவோம். ஆனா எத பத்தியும் கொஞ்சம் கூட கண்டுக்காம நம்ம பய புள்ள ஒருத்தன் ஆங்கிலம் பேசுவான். நமக்கு தெரியுற கொஞ்சம் நஞ்ச ஆங்கிலமும் மறந்துபோய்ரும்.. அப்பிடி பேசுவான். எப்படின்னா,
I will give yesterday .
You go, I go, touching touching office (நாம அலுவலகத்துல சந்திப்போம்) . 
Project Manager calling Me (உன்னைய டேமேஜர் கூப்பிடுறார்).

அப்படிபட்டவனுக்கு டஃப் குடுக்குற ஒரே ஆளு எங்க ப்ராஜெக்ட் மேனேஜர் தான்… அவரும் அவ்வளவு அழகா ஆங்கிலம் பேசுவார். எதாவது படிக்கும் போது கொஞ்சம் கடினமான ஆங்கில வார்த்தை வந்தால் ப்ளா.. ப்ளா…. அப்படின்னு சொல்லியே காலத்தை ஒட்டுறவர்..

இது எல்லாம் சும்மா ஒரு சாம்பிள் தான். வயிறு வலிக்க சிரித்த அனுபவம் எல்லாம் உண்டு.
ஒரு தடவை எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கையில்  நம்ம கூட வேலை பார்க்கிற ஒரு அமெரிக்கன் அவனும் சாப்பிட வந்தான். வந்தவன் சும்மா இருக்காம இதுதான் பிரியாணியா? நல்ல வாசனையா இருக்கேன்னு சொல்லி அவனும் ஒரு பிரியாணி வாங்கிட்டு வர சொன்னான் அலுவலக பையன்கிட்ட….. அது கூட ப்ளாஸ்டிக் ஸ்பூனும் குடுப்பாங்க.. நம்ம மலையாளி பண்ற  பிரியாணி  ப்ளாஸ்டிக் ஸ்பூனுக்கா மசியும்…. அந்த ஸ்பூன் உடைஞ்சு போச்சு…. அப்பிடியே பாவமா என்னய பார்க்க நானும் அலுவலக பையன்கிட்ட சொல்லி ஸ்பூன் கொண்டு வரச் சொன்னேன். அவன் ஒரு 3- 4 ஸ்பூன கொண்டு வந்த ஒடனே நம்ம அமெரிக்கன் ஒன்ன எடுத்திகிட்டு மீதிய பாக்கெட்டுல எடுத்து வச்சிகிட்டான். இத பார்த்த உடனே நம்மாளு பார்றா எவ்வளவு கன்ஜூஸா இருக்கான்னு சொல்ல, அவனுக்கு எதாவது புரிந்துவிடுமோன்னு நாங்க கொஞ்சம் டரியலாகி எதுவா இருந்தாலும் நம்ம தேசிய மொழியில பேசுன்னு சொல்ல நம்மாளு வேகமா இது ஆங்கிலமா?? இது ஆங்கிலமா?? கேட்டுட்டு, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு  அப்படின்னா அதுக்கு ஸ்பெல்லிங் சொல்லுன்னு சொன்னான் பாருங்க …….

நம்ம அமெரிக்கன்  இருந்த இடம் தெரியாம எந்திரிச்சு போய்ட்டான்.
அதுக்கு அப்புறம் நம்ம கூட பழக்கம் வச்சிக்கிக்க அவன் ஒன்னும்  அவ்வளவு கேனையன் கிடையாது…!!!!!!!!!!!!!

இன்னொரு முறை நம்ம டேமேஜர் கூப்பிட்டு அவங்கிட்ட ரொம்ப சீரியசா பேசிகிட்டு இருந்தார், அவர் தான் இவனுக்கு டஃப் குடுக்குற ஆளாச்சே…… அதா.. அதா.. அப்படின்னு பாதிய அரபி+ பாதி ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொன்னது நமக்கு படியளக்குற மஹராசன் (கிளையன்ட்) ஒரு டாக்டர், அவரு U.S போயி ஏதோ ஆப்பரேஸன் பண்ணி இருக்காரு அவருக்கு ஒரு நல்ல பொக்கே வாங்கி அனுப்பிட்டு வா அப்படின்னு சொல்லிட்டு இது ரொம்ப முக்கியம், உடனே செய் அப்படின்னு வழக்கமான டயலாக விட்டுகிட்டு இருந்தாரு ….. நம்மாளும் உடனே செய்துட்டு வந்துட்டான். கொஞ்ச  நேரம் கழித்து அலுவலகமே இடிந்து  விழுவதை போல நம்ம டேமேஜர் காட்டு கத்தல் கத்திக்கொண்டு இருந்தார். இடி மழை எல்லாம் விட்ட பிறகு நம்மாளு மெதுவாக வெளியில் வந்தான். என்ன ஆச்சு என்றதற்கு, அந்த டாக்டருக்கு ஒரு பொக்கே அனுப்பியது கொஞ்சம் தப்பாயிடுச்சு,

இதுல என்ன பிரச்சினை? அவர்தான அனுப்ப சொன்னார் அப்புறம் என்ன? என்றேன்… இல்லடா மச்சான் அவரு Ph.D படிச்ச டாக்டராம்,  அவரு U.S போயி வேற யாருக்கோ ஆப்பரேஷன் பண்ணலையாம், அவருக்கு தான் ஆப்பரேஷன் பண்ணாங்கலாம்.!!!!!!!  நான் இவரு பெரிய டாக்டர் போல,  ஒரு சவாலான ஆப்பரேஷன் செஞ்சு சாதனை பண்ணி இருக்காருன்னு நெனைச்சு, அந்த பொக்கேவ அனுப்பிச்சுட்டேன்… என்றான்..  நெஞ்சு வலியால U.S போயி ஆப்பரேஸன் பண்ணிக்கிட்டு வந்தவர்க்கு  நம்மாளு அனுப்பின பொக்கேவோட வாசகம் என்ன தெரியுமா???
.
.
.
.
.
.
.
நீங்கள் மென்மேலும் இதே போன்று பல ஆப்பரேஷன்கள்  செய்ய வாழ்த்துகிறோம்………….!!!!!!!!!!!!

வாழ்க வளமுடன்……… தமிழ் தந்த புகழுடன்………………

Monday, April 23, 2012

குறையொன்றுமில்லை

வழக்கம் போல் இம்முறையும் வானம் பொய்த்திருக்கும்,
இருக்கும் தண்ணிக்கு வச்சுள்ள கத்திரியில்
இலைச்சுருட்டை விழுந்திருக்கும்
நிலவள வங்கியின் நகை ஏல அறிவிப்பு
தபால் கார்டில் வந்து சேரும் 
காதுகுத்தும் பிள்ளைக்கு தோடு போடவேண்டுமென
இளைய தங்கை சொல்லி போவாள்
முகங்கண்ட மறுகணமே அம்மாவென குரலெழுப்பும்
காளைகளை விற்று விட்டு ஊர் திரும்புவாய் நீ
பஸ் ஸ்டாண்டில்  நீ விரும்பிய  பெண் தான் விரும்பிய
புருஷனுடன் எதிர்ப்படுவாள் திரும்பி நிற்கும் உன்னிடத்தே
வலிய வந்து உரையாடி சௌக்கியமா எனக்  கேட்பாள்
நல்ல சௌக்கியம் என்று சொல் .......
 சு . செங்குட்டுவன் .

இது விகடனில்  முத்திரை கவிதையாக பவள விழா மலரில் வெளிவந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை,படித்தவுடனே இந்த கவிதை மனதில் ஆழமாக  தங்கி விட்டது.  எப்போது ஓய்வு கிடைத்தாலும் இதை எழுதி ரசிப்பது என்ற அளவுக்கு பிடித்தமானது.

சில நேரங்களில் யோசித்தது உண்டு இந்த கவிதை ஏன் இவ்வளவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று ஆனாலும் இதுவரை பிடி கிட்டியது இல்லை ..
சொல்லப்பட்டிருக்கும் எல்லா  விஷயங்களும்  நான் நெருக்கமாக  அனுபவித்தவை போலவே  தோன்றும் ..
வானம் பார்த்து கஷ்டத்தில் இருக்கும் ஒரு விவசாய குடும்பத்தின் சூழ்நிலையை தத்ரூபமாக சித்தரிக்கபட்டிருக்கும் ...  
"நிலவள வங்கியின் நகை ஏல அறிவிப்பு  தபால் கார்டில் வந்து சேரும் "   எல்லா விவசாய குடும்பத்திலும் இருப்பதுதான் .. சிறுபிள்ளையாக இருந்த பொழுது தபால் காரர் விட்டெறிந்த தபால் கார்டை எடுத்து அம்மாவிடம் கொடுக்கும் போது அம்மாவின் முகம் வாடிப் போகும்,
இளைய தங்கை என்றதில் இருந்து மற்றுமோர் தங்கையும் இருக்ககூடும் அவளுக்கும் இதே போன்றதொரு நிகழ்வுகள் நடக்கக்கூடும் அல்லது நடந்திருக்க கூடும் ...இவ்வளவு இடைஞ்சலுக்கு மத்தியில் அவனுக்கோர் ஒருதலை காதலோ அல்லது  நிராகரிக்கப்பட்ட காதலோ இருந்திருக்கலாம்.... அது நிறைவேறாத மன உளைச்சலில் இருக்கும் போது, பஸ் ஸ்டாண்டில்  அவளை பார்த்து  தவிர்க்க நினைத்தபின்  அவள்  வலிய வந்து உரையாடி சௌக்கியமா ?? எனக்கேட்பாள்.. நல்ல சௌக்கியம் என்று சொல் ...!!!!!
 எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உணர்வுபூர்வமாக கையாளும் போது வெறுப்பாக மட்டுமே பதில் அளிக்க தோன்றும்..
 என்ன ஒரு  மனோதிடமும் பக்குவமும் இருந்தால் அவ்வாறு பதிலளிக்க தோன்றும்!!! '' நல்ல சௌக்கியம் என்று சொல்" மிகவும் பிடித்த என்னை பாதித்த வரிகள்.

உணர்வுப்பூர்வமாக நான்  தாக்கப்படும்  போது எல்லாம் எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன்   "நல்ல சௌக்கியம் என்று சொல்" ....   

                                  வாழ்க வளமுடன் .... தமிழ் தந்த புகழுடன்......






     

Wednesday, April 4, 2012

தமிழ் எங்கள் உயிர், ஹிந்தி எங்கள் _ ​ _ _


சென்னைல வேலை பார்க்கும் போது கொஞ்சம் ஹிந்தி பேசும் மக்களும் என்கிட்டே வேலை பார்த்தாங்க, அவங்க கிட்ட பேசும் போது மேல சொன்ன வார்த்தை கூட கடைசில ரைமிங்கா ஒரு வார்த்தைய சேர்த்து பேசுறது ரொம்ப பிரசித்தி !!! 
அப்படி எல்லாம் பேசுனதுக்கு வட்டியும் மொதலுமா துபாய்ல கிடைச்சது பெரிய பெரிய  பல்ப்  ....    

 நான் வேல பார்க்கிற சைட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு ஒரு வண்டி வரும். கொஞ்ச நாள்ல நல்லா இருக்குறியா, என்ன செய்ற அப்படின்னு கொஞ்சம் போல ஹிந்தில பேசுறது... அந்த ஓட்டுனர் அவன் சொந்த கதை அப்படி இப்படின்னு கொஞ்சம் மொக்க போடுவான்...நம்மளுக்கு புரியுதோ இல்லையோ ஆமாம்  போடுறது .... ஒருநாள் காலையில வரும் போது மாப்ள கொஞ்சம் டல்லா வந்தான் ..என்னடா ஆச்சுன்னு கேட்டேன், ஏதோ சொல்ல ஆரம்பிச்சான், அவன் சொன்னதுல நம்மளுக்கு புரிஞ்சது என்னன்னா , நேத்து சாயந்திரம் வேகமா போனேன் கேமரா ,பிளாஷ்  அப்படின்னு ... இது போதாதா  நம்ம   கற்பனை குதிரைய தட்டி அவன் ஒரு கேமரா வாங்கி இருக்கான்னு நெனைச்சுகிட்டு , ஒ அப்படியா .. வெரி குட், என்ன பிராண்ட் , எங்க வாங்கின அப்படின்னு ரொம்ப சந்தோசமா  கேட்க அவன் மூஞ்சி போன போக்க பார்க்கணுமே... சரி எதோ அடிப்படையிலே தப்பு நடந்து இருக்குன்னு  புரிஞ்சுகிட்டு வராத போன அட்டென்ட் பண்றமாதிரி பாவ்லா பண்ணிட்டு வண்டிய விட்டு இறங்கியவுடன் கூட வந்த இன்னொரு பட்டானிடம் கேட்ட போது தான் புரிந்தது அவன் ஓவர் ஸ்பீடில் சென்றதால், ஸ்பீட் கன்ட்ரோல் காமிராவில் அவன் வண்டி பதிவாகி விட்டது [அப்படி பதிவாகும் போது பிளாஷ் வரும் ] அதற்கு அபராதம்  நமது ரூபாய் மதிப்பில்  7500  கட்ட  வேண்டுமாம். அதை சொல்லி அவன் புலம்பும் போது நான் என்னடாவென்றால்   வெரி குட், என்ன பிராண்ட் அப்படி எல்லாம்  கேட்டால் எப்படி இருக்கும் !!!! நல்ல வேளை வேற எதுவும் திட்டாம விட்டானேன்னு நெனைச்சுகிட்டு  நம்மளோட ஹிந்தி புலமைக்கு நானே ஒரு சபாஷ் போட்டுட்டு வேலைய பார்த்தேன்.       

     **********               ****************                  *************               
வேலைக்கு சேர்ந்த  புதுசுல  வர விடுமுறைய கொண்டாட நண்பர்களின்  ரூமுக்கு வரசொல்லி  இருந்தாங்க, எங்கே இருந்து டாக்ஸி எடுக்கணும், எங்க இறங்கனும் எல்லாம் தெளிவா சொல்லி  இருந்தாங்க, கூடவே டாக்ஸி கட்டணம் எவ்வளவு ஆகும்ன்னு சொல்லி இருந்தாங்க, டாக்ஸி- ல பட்டான்  டாக்ஸி ன்னு ஒன்னு இருக்கு, நம்மளுக்கு ரொம்ப பிடிக்காத பக்கத்துக்கு நாட்டுகாரன்  ஓட்டுறது, அதுல மீட்டர் எல்லாம் இருக்காது நம்ம ரேட்  பேசிட்டு ஏறிக்க வேண்டியதுதான், என்ன ரெண்டு வாரம் குளிக்காம மூணு வாரமா தொவைக்காத ட்ரெஸ்ஸ போட்டுட்டு இருப்பான் அத மட்டும் நாம சகிச்சுக்கனும்  மத்தபடி ரேட் கம்மியா இருக்கும்... மொழிதெரியாத நம்மள மாதிரி எவனாவது சிக்குனா அவனுக்கு கொண்டாட்டம்.... இத எல்லாம் நமக்கு சொல்லி குடுத்து, ஒரு  15 இல்ல  20  கேட்பான் ...  அவன் ரேட் கூட  சொன்ன அதிக  பட்சமா   நீ பீஸ் திராம்ன்னு   [20 dhs]  சொல்லிட்டு ஏறிக்க அப்டின்னாங்க..    நானும் ரொம்ப கெத்தா வந்து ஒரு பட்டான் டாக்ஸி காரன்கிட்ட எவ்ளோன்னு கேட்க அவன் பந்த்ரா திராம்ன்னு[15 dhs]   சொல்ல, அவன்  கட்டணத்த அதிகமா சொல்றான்னு நெனைச்சுகிட்டு, இல்ல இல்ல   [20 dhs]     அப்படின்னு நான் சொல்ல அவன் என்னைய மேலயும் கீழயும் பார்த்துட்டு  சரின்னு சொல்லிட்டான்.எறங்க போறப்ப  நீ மதராசியான்னு  கேட்க எனக்கு முகம் கொள்ளா சந்தோசத்தோட [பின்னே திரை கடலோடி திரவியம் தேடுன்னு சும்மாவா  சொன்னான்,, தமிழன் பேர நாட்டிடாண்டா ன்னு நெனைச்சிக்கிட்டு ]  ஆமாம்ன்னு  சொல்லிட்டு   எறங்கிட்டேன்.

வழக்கம் போல கொஞ்ச நேரம் கழிச்சு தான் நம்ம சிறு மூளை வேல செஞ்சது, அவன் அத நக்கலா கேட்ட மாதிரி இருந்துச்சேன்னு நெனைச்சு  நம்ம நம்ம நண்பர்கள் கிட்ட கேட்ட போதுதான் விஷயமே தெரிஞ்சது.. அவன் கொறச்சு கேட்டு நான் கூட குடுத்ததும்..    அப்புறம் முக்கியமா நம்ம  நாட்டுலேர்ந்து  ஒருத்தன் ஹிந்தி தெரியாம வர்ரான்ன அது ஒரு தமிழனா தான் இருப்பான்றதும்.. !!!!!!!!! 

  வாழ்க வளமுடன்  தமிழ் தந்த புகழுடன் !!!!!

Sunday, April 1, 2012

நம்மளோட தினம் ..................

நம்மள ரொம்ப கடுப்பு  கிளப்புற  விஷயத்துல  ஒன்னு படிக்க சொல்றது இன்னொன்னு அலுவலகத்துல  மீட்டிங் போடுறது....மீட்டிங்குன்னா சமோசா தின்னுட்டு சீட்ட தேச்சிட்டு போறது இல்ல ....நம்மள அத ஏன்  பண்ணல??? இத ஏன் முடிக்கல ன்னு?? கேட்டு சாகடிச்சுடுவானுங்க .. ரொம்ப கொடுமை என்னன்னா  அவங்க மீட்டிங் போடுறது ஆறு மணிக்கு மேல , அப்புறம் அவங்க பேசுறது எல்லாம் அரபி மொழியில .. கடைசியா நம்மள மாதிரி ஒரு சில நல்லவங்கள பார்த்து  ஓகே  வா ? அப்படின்னு கேப்பாங்க . ..  அங்கயும் நம்ம   சிங்க குட்டிகள் அசராம ஓகே  ஓகே .. அப்படின்னு சொல்லிட்டு நாங்களே சிரிச்சுக்குவோம் .... கடைசியா ஏதாவது  ரொம்ப  முக்கியமான விசயம்னா  ஒரு புண்ணியவான் மொழி பெயர்த்து சொல்லுவான்.... இல்லைன்னா  அதுவும் இல்ல...
நாங்களாவது பரவாயில்ல ஒரு அஞ்சாறு  பேரு இருப்போம்.... சின்னதா சிரிக்கவாச்சும் செய்யலாம் .. எங்க கூட ஒரு அமெரிக்கன் இருந்தான் அவன் பாடு ரொம்ப திண்டாட்டம்... நாங்க ஆமாம் சாமி போடும்போதெல்லாம் வாட்? வாட்? ன்னு கேட்டு  நம்மள கொன்னுடுவான் . அதுக்கு அப்பறம் எவனும்  அவன் பக்கத்துலேயே உட்காரது கிடையாது .. அவனும் எல்லார் வாயையும் பார்த்துட்டு எந்திரிச்சு போய்டுவான்...
           
நம்ம நண்பன் கொஞ்ச காலம்  இத பார்த்துட்டு ஒரு நாள் மீடிங்குல இருக்கும்   போது  எங்கிட்ட சொன்னான்,  மச்சான் ஒரு எனக்கு ஒரு  கால்  பண்ணு என்றான், கால் வந்தவுடன் எனது டேமேஜர  பார்த்து ஐ எஸ் டி  கால் என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.. வேலை  நேரம் முடிந்து விட்டதால் அவரும் அவனை விட்டுட்டு எங்கள வறுத்து  எடுத்துட்டார் வழக்கம் போல ...
அடுத்து வாரம் மீட்டிங்குக்கு வரும் போதே இன்னைக்கு பல்ப் எதுவும் வாங்க கூடாதுன்னு வந்தேன். என் நண்பனும் பவ்யமா என் பக்கத்துல உக்கார்ந்துகிட்டு கொஞ்சம் நேரம் போனவுடன் மச்சான் கால் பண்ணுடா என்றான் , நான் ரொம்ப பந்தாவா இல்லன்னு தலைய ஆட்டினேன்.. கொஞ்ச நேரம் என்னையே பார்த்துட்டு அவன் மொபைல  எடுத்து  அவனோட ரிங் டோன ஒலிக்க வச்சுட்டு வழக்கம் போல வெளிய போய்ட்டான்..
அப்புறம் என்ன நான் வழக்கம் போல பல்ப் வாங்கிட்டேன்.
                                   ***          ***          ***         ***    

இன்னைக்கு காலையில அலுவலகம் வந்து கார  பர்க்கிங்குல விட்டுட்டு  உள்ள வந்த கொஞ்ச நேரத்துலேயே நம்ம ஆபீஸ் டிரைவர் வந்து எந்து சாரே வண்டி எங்கனே  பஞ்சர் ஆயின்னு மலையாளத்தில சம்சாரிக்க,  நானும் ரொம்ப ஆர்வபட்டு எந்த வீல்? முன்னாடியா இல்ல பின்னாடியா ??  ட்ரைவர்  சைடான்னு   கேள்விக்கணைகள்  தொடுக்க... என் நண்பன் ஒருவன் பல்ப்ப   காமிச்சு சிரிச்சுட்டு போய்ட்டான் . சரி இன்னைக்கு வேற யாரையாவது பலிகட ஆக்கணும் இல்லைன்னா நம்மதான் ஊறுகான்னு நெனைச்சுக்கிட்டு அடுத்த பலி ஆட்டுக்காக காரிடார்ல நின்னுக்கிட்டு இருந்தேன், அப்பத்தான் நம்ம செகரட்டரி நாலு  அடில வந்துகிட்டு இருந்தான். நாலு அடிங்குறது அவன் உயரம் இல்ல அவனோட அகலம்!!!. வந்தவன் ஒரு வணக்கத்த வச்சிட்டு  உள்ளே  போக நான் ரொம்ப சீரியசா  என்ன ஆச்சு உன் சட்டையில பின்னாடி எதோ   கறுப்பா ஒட்டி இருக்குன்னு சொல்ல, அவன் எட்டாத கைய வச்சிக்கிட்டு   இங்கயா அங்கேயா ன்னு கேட்டு ஒரு கட்டத்துல சர சரன்னு   சட்டைய  கழட்டிடான். இதுல நம்ம ஆபீஸ் பாய்  ஒரு கப்ல தண்ணியும் கொண்டு வர, அதே நேரத்துல நம்மளோட டேமேஜரும் உள்ள வர , ஆகா..  ஆகா ..ஒரு ஆறடி உயரத்துல  நாலடி அகலத்துல  சட்டை இல்லாம  நம்ம செகரட்டரி நிக்க அதுக்கு பக்கத்துல ஆபீஸ் பாய்  கைல தண்ணியோட நிக்க இவங்க  ரெண்டு  பேர சுத்தி  நாங்க எல்லோரும் நிக்க  ஒரே அமர்க்களம்.... நம்ம  டேமேஜர்  அதிசயமா நல்ல மூடுல இருக்க அனைவரும்  சிரித்தபடியே சென்று விட்டோம் அந்த செகரட்டரிய தவிர .........

கொஞ்சம் லேட்டாக வந்த நண்பனின் முகம் சுரத்தில்லாமல் இருக்க நான் ரொம்ப  கேட்டபிறகு சொன்னான் " ஒண்ணுமில்ல  மச்சான் நம்ம HR மேனேஜர  டெர்மினேட்    பண்ணிட்டதா சொன்னாங்க, நானும் ரொம்ப சந்தோசப்பட்டு  அவனுக்கு போன போட்டு கொஞ்சம் கலாசிட்டேன் அப்புறம் தான் சொல்றாங்க இன்னைக்கு  ஏப்ரல் பூல்ன்னு."  
                                     
                        வாழ்க வளமுடன் ...... தமிழ் தந்த  புகழுடன்