Wednesday, November 27, 2013

EXPO 2020

இது தோனியோட 20:20 இல்ல துபாயோட 2020.UAE ல் உள்ள அனைவரும் சமீப காலமாக அடிக்கடி சொல்லும் வார்த்தை இந்த 2020 எக்ஸ்போ தான்.

என்ன இந்த எக்ஸ்போ 2020?

ஏழு வருடத்திற்கு அப்புறம் 2020ல் நடக்கவிருக்கும் ஒரு எக்ஸ்சிபிஷன் ட்ரேட்பேரை  குறிப்பதுதான் இந்த எக்ஸ்போ 2020.

ஆறுமாத காலத்திற்கு நடக்கும் இந்த எக்ஸ்போவிற்கு 2.5 கோடி நபர்கள் வருவார்கள் எனவும், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரி 2020 ல் நடக்கும் விஷயத்திற்கு இப்போ என்ன என்றால், அந்த எக்ஸ்சிபிஷன் நடத்துவதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதுதான்   பாரீஸில்  இன்று நடந்து கொண்டிருக்கிறது.பீரோ ஆப்  இன்டர்நேஷனல் எக்ஸ்போசிஷன் (BIE )என்னும் அமைப்பு மற்றும் அதன் உறுப்பு நாடுகள் சேர்ந்துதான்  இதனை  நடத்தும் இடத்தினை தீர்மானிப்பது மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதும்.

சிம்பிளாக சொல்வதென்றால் எக்ஸ்போ நடத்த விருப்பமுள்ள நாடுகள், தங்களிடமுள்ள சிறப்பம்சங்களை குறிப்பிட்டு  இதில் கலந்து கொள்ளும். BIE  அமைப்பால்  அவர்களுடைய பொருளாதார தகுதி,தரை மற்றும்  வான்வழி போக்குவரத்து வசதிகள், இதனை நடத்துவற்கான உள்கட்டமைப்பு வசதிகள்  பரிசீலனை செய்யப்படும்.போட்டியில் பங்கு பெரும்  நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்வது உண்டு.

கடைசி நாளான இன்று   இது குறித்த 20 நிமிட வீடியோ இன்று ஓட்டெடுப்பிற்கு முன்னர் BIE  மெம்பர்களுக்கு திரையிடப்படும் பின்னர்   BIE -ல் உள்ள 163 நாட்டு  மெம்பர்கள் ஓட்டெடுப்பின் மூலம் அந்த நாடு தேர்ந்தெடுக்கப்படும்.

இதனால் என்ன உபயோகம்?

சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரம் தான். இதனை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதன் மூலம் அடுத்த 5 வருடங்களுக்கு,
 • அந்நிய முதலீடு பெருமளவில் ஈர்க்கப்படும்.
 • நேரடியாக கட்டுமானம், மற்றும் அதனை சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் .
 •  வங்கிகள் மற்றும் பொதுத்துறைகளில்  தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு பெரும்.
 • ஹோட்டல், டூரிசம் கணிசமாக வளர்ச்சியடையும்.
 • பொருளாதாரம்,தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
(இவை எல்லாவற்றையும் விட கேரளாவுல மிச்சமீதி இருக்கும் நம்ம சேட்டன்கள்  வரவு ரொம்ப ரொம்ப அதிகரிக்கும் )

இந்த ரேசில் ஜெயிக்கத்தான் துபாய் படு மும்முரமாக செயல் படுகிறது. இதனை நடத்துவதன் மூலம் 2009-11 களில் இருந்த பொருளாதார மந்த நிலையில் இருந்து முற்றிலுமாக வெளிவர இதனை ஒரு அறிய வாய்ப்பாக துபாய் கருதுகிறது.
இதற்கான போட்டியும் கணிசமாக இருக்கிறது.

ரேசில் இருக்கும் நாடுகள் 
1.துபாய் 
2.துருக்கி 
3.பிரேசில் 
4.ரஷ்யா .

 மொத்தமாக போட்டியிடும் நான்கு நாடுகளில் கடும் சவாலாக இருப்பது துருக்கி என்கிறார்கள். பழைய பாரம்பரியத்தை பின் பற்றி வரும் நாடுகளில் இதுவும் ஒன்று என்பதால் முன்னுரிமை சற்று கூடுதலாக உள்ளது.ஆனால் இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகளும் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களும் இதற்கு பெரிய பின்னடைவை கொடுத்திருக்கின்றன.

எல்லா காரணிகளிலும்  அதிக முன்னிலையோடு துபாய் இருப்பது இதற்கான வாய்ப்பை சற்று பிரகாசமாக வைத்துள்ளன. இது நடைபெறும் இடம் குறித்த சில புகைப்படங்கள் ,
இது குறித்த இறுதி முடிவு இன்று இரவு துபாய் நேரப்படி 8.30மணிக்கு பாரீஸில் இருந்து   அறிவிக்கப்படும்.

பார்க்கலாம் பூங்கொத்தா அல்லது  புஸ்வாணமா என்று !!!!

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!6 comments:

 1. சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரத்தை அறிந்தேன்... நன்றி...

  ReplyDelete
 2. வாங்கண்ணே, வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிண்ணே.

  ReplyDelete
 3. MGR ulagam sutrum valiban song shooted in EXPO 1970- OSAKA JAPAN
  http://www.youtube.com/watch?v=i3UNk4jNxgM

  உலகம் அழகு கலைகளின் - Ulagam azhagu kalaigalin surangam
  www.youtube.com

  ReplyDelete
  Replies
  1. தெரியாத தகவல். நன்றி நண்பா ..

   Delete
 4. Dubai has won the right to host the World Expo 2020 after a thrilling night of voting in the French capital Paris.

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா இன்னொரு 5 வருஷம் விசா அடிச்சிக்க வேண்டியதுதான் :-) வருகைக்கு நன்றி நண்பரே ....

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...