Monday, November 5, 2012

அத்தாச்சி போட்ட சூடு !!!

                                                   பொங்கல் நேரத்தில் வீட்டிற்கு வெள்ளை அடிப்பது, வீட்டை சுத்தம் பண்ணுவது என்று எங்களை  சத்தெடுப்பார்கள். வீட்டினுள்  இருக்கும் அனைத்து பொருட்களும் கொல்லைப்புறம் வந்துவிடும். அனைத்தும் கழுவியும்,துடைத்தும் திருப்பி வீட்டிற்குள்  வைக்கப்படும். வீட்டை அலசுவதற்கு அடிபைப்பில்  தண்ணீர் அடிக்கணும்  பாருங்க, அப்பப்பா  கண்ணைக்கட்டிடும். இதுதான் கடைசி குடம், கடைசி குடம்ன்னு சொல்லியே ஒரு ஏழெட்டு  குடம் அடிக்க வைச்சுடுவாங்க.



எல்லாம் முடிஞ்சு சரிதான் இனி விளையாட போகலாம்னு நினைக்கும் போது, நம்மளோட பளிங்கு, சோடாமூடி போன்ற பொக்கிஷம்  எல்லாம் வீட்டுக்குள்ள இருக்கும். அலசிவிட்ட ஈரம் காயுற வரைக்கும் வீட்டுக்குள்ள விடமாட்டாங்க. ஒரே சத்திய சோதனைதான் போங்க ...

நான் தவழும் பிள்ளையா இருக்கும் போது நடந்தது கீழே  ,
அத்தை  பசங்கள் எல்லாம் ஒன்னாதான் படிச்சோம்.சின்னபசங்க   யாராவது   அழும் போதோ அல்லது சுட்டித்தனம் செய்யும் போதெல்லாம் பேசாம இருக்கியா இல்ல ஊதாங்குழலை காய வச்சு சூடு போடவா என்று  எங்கம்மா அதட்டுவதும், அந்த குழந்தைகள் அமைதியாவதும் வாடிக்கையாய் இருந்திருக்கிறது.

 ஒரு பொங்கல் சமயத்தில்  எனதருமை அம்மா வீடு அலசிக்கொண்டு இருக்க , வெளியில் தொட்டிலில் இருக்கும் என்னை பார்த்து கொள்ளமாறு  சின்னபிள்ளையான எனது அத்தாச்சியிடம் சொல்லி இருக்கிறார்கள். தொட்டிலில் இருந்து நான் சிணுங்கும் போதெல்லாம் எச்சரிக்கை செய்வது போல பேசாம இருக்கியா இல்ல  ஊதாங்குழலை காய வச்சு சூடு போடவா? என்று எனது அம்மா பாணியில் அதட்ட,
நான் தொடர்ந்து அழவும்,வெளியில் உலை கொதித்து கொண்டிருந்த விறகு அடுப்பில் ஊதாங்குழலை காய வைத்து கையில் ஒரு இழுப்பு இழுத்து விட , நான் வீறிட்டு அழவும் எனது அம்மா  ஓடி வந்து பார்க்க, எனது அத்தாச்சியோ ஊதாங்குழலும் கையுமாக ஒரு கேள்வி கேட்டு இருக்கிறார்கள் அது என்னன்னா,   
                             *
                             *
                             *
                             *
                             *
                             * 
ஏன்  அத்தை  நான் சூடு போட்டும் இவன் இன்னும் அழுகையை நிறுத்தலை ???
அப்புறமென்ன அவங்களை ஸர்ஃப், நிர்மா, எல்லாம் போட்டு வெளு வெளுன்னு   வெளுத்துட்டங்களாம் .
எப்போதாவது  அத்தாச்சியிடம்  ரொம்ப கிண்டலடித்து பேசும் போது,      தலையாட்டிக்கொண்டே சொல்வார்கள் உனக்கு சூடு போட்டது    தப்பில்லை,     ஆனா அந்த சூட்டை உன் வாயில போட்டிருக்கணும்!!!. 

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!

14 comments:

  1. வட்டிய சன்னி டேய்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
    பல நிறுவனங்களில் இருந்து தங்கள் இணையதளத்திற்கு எழுதிதருவதற்கு அழைப்புவருகிறது போல தெரிகிறதே?????

    ReplyDelete
    Replies
    1. இன்னா பாயி இப்போ என்னான்ர? ஐ திங்க் யு ஸ்பீக் ப்ரிட்டிஷ் இங்கிலீஸ்........ வாட் எ பிட்டி??? வாட் எ பிட்டி???

      Delete
  2. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் (www.tamiln.org) இணையுங்கள்.

    ReplyDelete
  3. நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. நன்றி நண்பரே...

    ReplyDelete
  5. நன்றி நண்பரே...

    ReplyDelete
  6. oh.........what a sunny days!!!!!!!!!!!!!

    you are correct Robert...

    ReplyDelete
  7. குழந்தைகள் முன்னாடி ஜாக்கிரதயா வார்த்தைகளை விடவேண்டும் என்பது நிரூபணம் உங்கள் மூலம்..நல்ல வேலை இந்த வாய்தானே அழுதுனு .....பண்ணாமல் விட்டார்களே..பொன்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே, குழந்தைகளுக்கு முன் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாமே பொறுப்பு. நல்ல வேளை வாயில சூடு வைக்கல, ஆனா அதுக்கு இப்போ ரொம்ப ஃபீல் பண்ணுறதா கேள்வி அவ்வ்வ்வ்வ்.......... வருகைக்கு நன்றி நண்பரே..

      Delete
  8. பாவம் அப்பவே நீங்க இப்படிஎல்லாம் வருவீங்கனு தொலைநோக்கு பார்வை இல்லாமல் போச்சிப்போல...யாதுக்கும் ஜாக்கிறதயாய் இருங்க.....
    படிச்சிருப்பாங்கலா....pon

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே வருகைக்கும்,மறுமொழியிட்டமைக்கும்...

      Delete
  9. வீட்டை அலசுவதற்கு அடிபைப்பில் தண்ணீர் அடிக்கணும் பாருங்க, அப்பப்பா கண்ணைக்கட்டிடும். இதுதான் கடைசி குடம், கடைசி குடம்ன்னு சொல்லியே

    இப்பெல்லாம் பசங்களை ஏமாற்ற முடியாது..எல்லோருமே ரொம்ப கெளரவம் பார்க்கிறார்கல்..டூ வீலர் கொடுத்து இதை வாங்கி வா என்றால் ஜாலியாக ரைடிங் செல்வார்களேத்தவிர...நோ சான்ஸ்..காலம் மாறிவிட்டது..

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு கனாக்காலம் பாஸ்...வருகைக்கும்,மறுமொழியிட்டமைக்கும் நன்றி நண்பரே ...

      Delete