Monday, September 10, 2012

சினிமாவும் சிக்கித்தவித்த நானும் !!!

                                             சின்னப்பையனா இருக்கும் போது நம்மள தியேட்டருக்கு அதிகமா கூட்டிட்டு போகமாட்டாங்க. ஏன்னா போன கொஞ்ச நேரத்துல படத்துல சண்டை எப்போவரும், எப்போவரும்னு கேட்டு நச்சரிக்கிறது. இல்லைன்னா கும்பகர்ணனை குசலம் விசாரிக்க போயிடுறது. டிக்கெட்  எடுத்து தூங்கினது  கூட அவங்களுக்கு கடுப்பாகாது, படம் முடிஞ்சதுக்கப்பறம்  தூக்க கலக்கத்துல என்னைய தூக்கிட்டு போக சொல்லி சண்டை போடுறதுல  ரொம்ப கடுப்பாகிடுவாங்க (நம்மதான் மாடு மாதிரி இருப்போமே!!!! ).  இதுனாலேயே என்னைய அடிக்கடி கழட்டி விட்டுட்டு படத்துக்கு போயிருவாங்க.
 ஒருநாள்   சாயந்திரம்  நான் கராத்தே கிளாசுக்கு  வந்துட்டேன். மாஸ்டர் வர லேட்டானதால  கிரௌண்டுக்கும் ரோட்டுக்குமா கராத்தே  ட்ரெஸ்ஸோட ஓடி ஓடி அவர் வர்ராறா  இல்லையானு  பார்த்து விளையாண்டுட்டு இருந்தோம். அப்ப  என்னோட பிரெண்ட் ஒருத்தன் வந்து உன்னோட அம்மா வர்றாங்கடான்னு சொல்ல, ஓடிவந்து பார்த்தா  என்னோட அம்மாவும், புதுசா டீச்சர் வேலையில சேர்ந்திருந்த  என்னோட அத்தாச்சியும் வந்துகிட்டு இருந்தாங்க, நான் ஓடிப்போய் அவங்க முன்னாடி நின்னவுடனே அவங்க  ஷாக்காகி,
 ஒண்ணுமில்லப்பா, அத்தாச்சிக்கு  நோட்ஸ் ஆப் லெசன் பார்மேட் வாங்கணும் அதான் இந்த டீச்சர் வீட்டுக்கு போறோம்னு   எனக்கு தெரிஞ்ச ஒரு டீச்சர் பேரையும்   சொல்லிட்டு  போனாங்க. கரெக்ட்டா  6.30 மணிக்கு அவசர அவசரமா  நோட்ஸ் ஆப் லெசனான்னு??  நம்ம மனசுக்குள்ள ஒரு அலாரம்  அடிச்சுக்கிட்டே இருந்ததால  கேட் ஓரமா நின்னு பார்த்துகிட்டே இருந்தேன் .

 லெப்ட்ல போனா டீச்சர் வீடு, ரைட்ல போனா தியேட்டர்ன்னு  பார்த்துகிட்டே இருக்க , நம்ம வில்லத்தனம் தெரியாத  நம்மாளுங்க திரும்பி கூட பார்க்காம  ரைட்ல திரும்ப, நண்பனொருவனை என்னோட டிரெஸ்ஸ வீட்டுக்கு எடுத்துட்டு போகச் சொல்லிட்டு, கராத்தே  ட்ரெஸ்ஸோட வடிவேலு சொல்ற மாதிரி "எடுத்தேன் பாருங்க ஓட்டம்" ரோடு, மார்கெட்டுன்னு  ஒன்னும் பார்க்கலையே. எங்கம்மா டிக்கெட்  எடுக்க போற நேரத்துல உள்ள போய்  சேர்ந்துட்டேன். மாஸ்டர் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்னு பிட்டை  வேற  போட்டுட்டு, படத்தையும்  தூங்காம பார்த்துட்டேன் .

ஆனா நம்ம நேரந்தான் நாம பஸ்ல போன அது பிளைட்டுல நம்மளுக்கு முன்னாடி வந்து நிக்குமே !!!.
நான் இப்படி பாக்யராஜ் மாதிரி  ஸ்லோமோஷன்ல கராத்தே  ட்ரெஸ்ஸோட ஓடி வந்ததை லேட்டா  வந்துகிட்டு இருந்த  கராத்தே  மாஸ்டர் பார்த்துட்டார். அப்பறம்  என்ன?  அடுத்த கிளாசுல  நாந்தான்   அவருக்கு  "பஞ்சிங் பேக் " . குத்துங்க மாஸ்டர் குத்துங்கன்னு  நான் நிக்க, பைனல் டச்சா கைல மடக்கி வைச்சிருந்த பெல்ட்டால என்னை அடிக்க ஓங்க , எசகு பிசகா திரும்புன நான்  இன்னொருத்தர்  மேல நல்லா  மோத  என்னோட சில்லு மூக்கு ஒடைஞ்சு  மூக்குலேருந்து  ரத்தம் கொட்டோ கொட்டென கொட்டிடுச்சு. சரி சரி  தக்காளி சட்னிதானே விடுன்னு   தொடச்சிக்கிட்டு வீடு போய்  சேர்ந்தேன். (பின்னே இதையெல்லாம் சொல்லி அங்க வேற அடி வாங்கனுமா என்ன???)

ம்ம்ம்.....  சொல்ல மறந்துட்டேனே, சாகசமெல்லாம் பண்ணி, பஞ்செல்லாம் வாங்கி   அப்படி   நான் பார்த்த படம் நம்ம இளைய திலகம் பிரபு நடிச்சது , படத்தோட பேரு அதாங்க அதான், நான்  அந்த க்ரௌண்டுக்கு  கொடுத்தது,  
   "ரத்த தானம் ".


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!


6 comments:

 1. mikavum arumai!

  முகநூலுக்கு போட்டியாக வளர்க்கூடிய வாய்ப்புள்ளது என்று கருதப்படும் ஒரு தளம் இது ! இதில் சேரும் ஒவ்வொருவருக்கும் 1 வர்சுவல் ஷேர் ஐயும் தருகிறது ! முகநூல் போலன்றி கூகிள் போல வரும் வருமானத்தில் நமக்கும் பங்கு தருவது என்ற நோக்கத்தில் உருவாகி வருகிறது இந்த சோசியல் நெட்வொர்க் ! தற்போது அழைப்பின் மூலம் மட்டுமே சேரமுடியும் !

  இந்த புதிய தளம் ஃபேஸ்புக்கோடு ட்விட்டரும் சேர்ந்தால் எப்படி இருக்குமோ . . . அதோடு கூகில் ப்ளஸ்ம் சேர்ந்தால் என்ன ஆகுமோ . . . அவையனைத்தையும் தரைருக்கிறது !

  மிகவும் அருமையான நோக்கங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இத்தளம் அழைப்பின் அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்க ஆரம்பித்திருக்கிறது ! அதிலும் இந்தியாவில் தான் சூடாகிவருகிறது ! நீங்களும் இதில் பங்குதாரர்கள் ஆவீர்கள்!

  சேர: http://www.zurker.in/i-304957-cynwwrawql

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பரே.

   Delete
 2. எல்லோருடைய வாழ்விலும் ஒவ்வொரு பருவமாற்றத்திலும் சில நிகழ்வுகல் நிகழ்வது சகஜமே. அதை பிற்க்காலத்தில் பிறர் வாசிக்கும்படியா, சின்ன சின்ன நிகழ்வுகலையும் தொகுத்து வழங்குவதென்பது சிலருக்கு வருகிறது..எழுதும் நடையில்தான் பிறறை வாசிக்க தூண்டும் நுட்ப்பம் உள்ளது...வாழ்த்துக்ள்...நன்றாக வந்திருக்கிறது...மேலும் சிறப்புற வாழ்த்துகிறோம்.pon.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி நண்பரே!!!!

   Delete
 3. machchan superda super romba nalla irukkupa arumaiyana eliya nadaiyil ulladhu intha paghudhi matrum title card kalakkuthu machchan.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி மச்சான்....

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...